chennireporters.com

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் மார்ச் 1 இன்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மலர் வளையம் வைத்து வணங்கினார்.

அதனை தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.

 

பின்னர் பெரியார் திடலுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் மன்னர் வளையும் வைத்து வணங்கினார்.

அவருக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி இனிப்பு வழங்கி சால்வைஅணிவித்தார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் தன்னை சந்திக்க வரும் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை கொடுத்து பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வழங்கி வருகிறார்.

 

சமூக வலைதளங்களில் ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் 70 என்கிற வாசகம் ட்ரெண்டிங் ஆகி  வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் முதலமைச்சர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழவைண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!