chennireporters.com

#puzhal layout புழல் அருகே லே-அவுட் போடாத காலி இடத்திற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள். கைமாறிய கோடிகள்.

புழல் அடுத்த சிறுங்காவூர் பகுதியில் காலியாக உள்ள ஏழு ஏக்கர் இடத்திற்கு புழல் பிடிஒ சித்ரா மற்றும் மணிசேகர் ஆகியோர் லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு  போடாத LAYOUT ற்கு அனுமதி வழங்கியுள்ளனர். மேலும்  CMDA அதிகாரிகளும் பல லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் அரசு அனுமதி மற்றும் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காமல் அவர்களும் அனுமதி அளுத்துள்ளது பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிடிஓ சித்ரா.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுங்காவூர் கிராமத்தில் சுமார் 7 ஏக்கர் கொண்ட இடத்தில் 143 வீட்டு மனைகள் அமைக்க காலியாக உள்ள இடத்தில் போடப்படாத LAYOUT ற்கு 24/04/2023  அன்று  CMDA நிர்வகம் மனைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.  அதை தொடர்ந்து புழல் ஊராட்சி ஒன்றியத்தில் 19/12/2023 அன்று நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் போடப்படாத LAYOUT ற்கு கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகமும்  தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இணைந்து அனுமதியும் வழங்கி உள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர்  மல்லிகா மீரான்.

காலியாக உள்ள போடப்படாத LAYOUT ற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலர்  மல்லிகா மீரான் கடந்த 26/12/2023 மற்றும் 15/02/2024 அன்று CMDA,  அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ( ஊராட்சிகள் ) திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் மனு   கொடுத்துள்ளார்.

அரசு அதிகாரிகளை ஏமாற்றி சிறுகாவூர் கிராமத்தில் 7 ஏக்கர் கொண்ட இடத்தில் 143 வீட்டுமனைகளை நியூ ஸ்டார் சிட்டி என்ற பெயரில் ஜாஃபர் உசேன் லேஅவுட்டுகளை போடாமலேயே அனுமதி வாங்கியுள்ளார். இதனால் சிஎம்டிஏ மற்றும் புழல் பிடிஒ அலுவலக அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கை மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜாஃபர் உசேன் போடும் எல்லா லே அவுட்டுகளிலும் சிஎம்டிஏ விதிமுறைகளுக்கு எதிராகத்தான் இருக்கும். அதில் பல்வேறு முறைகேடுகள் இருந்தும் கூட அதிகாரிகள் ஜாஃபர் உசேன் போடும் நியூ ஸ்டார் சிட்டிக்கு அனுமதி வழங்குவது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லே-அவுட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நியூ ஸ்டார் சிட்டி இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யாமலேயே அனுமதி வழங்கியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

 

நியூ ஸ்டார் சிட்டி திறுவனம் அந்தப்பகுதியில் முறைகேடாக லேஅவுட் போட்டுள்ளது. அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று அந்த பகுதி கவுன்சிலர் கொடுத்த புகாரின் மீது இதுவரை மாவட்ட நிர்வாகமோ அல்லது  சிஎம்டி அதிகாரிகளோ, புழல் பிடிஒ அலுவலக அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் நியூ ஸ்டார் சிட்டி திறுவனத்தின் உரிமையாளர் ஜாஃபர் உசேன் பல லட்சம் ரூபாய் அவர்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனால் அதிகாரிகள் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுக்க இருப்பதாக சொல்லுகிறார் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான்.

 

காலியாக உள்ள இடத்தில் லே-அவுட் போடப்படாமல்  லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அனுமதி வழங்கி இருப்பது காணாமல் போன வடிவேலு பட கிணறு கதையாக தான் இருக்கிறது.

பிடிஓ சித்ரா.

இந்த லே-அவுட் அனுமதி வழங்கியது தொடர்பாக பிடிஓ சித்ரா அவர்களிடம் விளக்கம் கேட்க  நாம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

புழல் பிடிஒ அலுவலக பொறுப்பு அதிகாரியான மணி சேகர்.

புழல் பிடிஒ அலுவலக பொறுப்பு அதிகாரியான மணி சேகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.  அவர் பணியாற்றிய பல்வேறு இடங்களில் பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது தான் இவருக்கு டைம்பாஸ். அப்படி நடந்த பல  வழக்கு நிலுவையில் உள்ளது. சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் சிக்கிய மணி சேகர் மீது துறை ரீதியான நடவடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை. இந்த இடத்திற்கு வருவதற்கே பலம் லட்ச ரூபாய் பணம் கொடுத்து தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு சிமெண்ட் திருடி விற்றதில் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  காலி இடத்திற்கு லே-அவுட் போட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரியில் இவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது whatsapp எண்ணிற்கு இந்த பிரச்சனைக்குரிய லேஅவுட் அனுமதி தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தோம் அதற்கும் அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. பணம் கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும் அரசு விதிமுறைகள் பற்றி கவலைப்படாமல் லஞ்சமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிடிஓ சித்ரா அவர்கள் பணம் கொடுத்தால் எந்த வேலைகளையும் செய்து தருவார் என்பதை  காட்டுகிறது இந்த லே அவுட் நில அனுமதி விவகாரம்.

இதையும் படிங்க.!