கேரள மாநில ஆளுநராக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும் சூழலில்,
பல்வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் ராஜாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள நிலையில் அவரை ஆளுநராக நியமிக்க ஒப்புதல் வழங்கக்கூடாது என குடியரசு தலைவருக்கு, மூத்த வழக்கறிஞர் துரைசாமி கடிதம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்
ஹெச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக உதவி ஆணையாளர் ஹரிஹரன் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த அடிப்படையில் அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.
எச்.ராஜா அரசியல் தரம் தாழ்ந்து எல்லா தலைவர்களையும் இழிவுபடுத்தியும் அவர்களது குடும்ப பெண்களை அவமானப்படுத்தியும் பேசிவருகிறார்.
இது தவிர அவர் மீது பல்வேறு வழக்குகள் தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது இப்படிப்பட்ட ஒருவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமித்தால் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்படும்.
மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் அவர் செயல்படுவார் எனவே இவரைப் போன்ற தீய சக்திகளை மாநிலத்தின் ஆளுநராக நியமிக்க கூடாது என்று தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.