chennireporters.com

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட காவல் துறையினர்கள்.  இதில் நான்கு பேர் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள உயர் போலிஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரிகளை  அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

                               இன்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள அதிகாரிகள்;

1.அப்போதைய . ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ்,
(தற்போது காவல் துறை நலப் பிரிவில் ஏடிஜிபியாக உள்ளார்).

ADGP சைலேஷ் குமார் யாதவ்

2.திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், (தற்போது சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்)

DIG கபில்குமார் சரத்கர்

3. தூத்துகுடி எஸ்.பி மகேந்திரன்,
(தற்போது சென்னை அடையாறு துணை ஆணையர் )

DC மகேந்திரன்

4.துணை எஸ்.பி லிங்கத் திருமாறன்,

                                      ஆய்வாளர்கள்

5.திருமலை,

6.ஹரிஹரன்

7.பார்த்திபன்

                                     துணை ஆய்வாளர்கள்

8.சொர்ணமணி,

9.ரென்னெஸ்,

                                      முதல் நிலை காவலர்கள்

10.சுடலைக்கண்ணு

11.சதீஷ்குமார்,

10. கண்ணன்,

                                        தலைமை காவலர்

11. ராஜா,

                                         இரண்டாம்நிலை காவலர்கள்

12.ராஜா,

13.தாண்டவமூர்த்தி,

                                            காவலர்

14.மதிவாணன்

உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

இதில் ஒரு ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!