தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் ஐயா நல்ல கண்ணுவின் உயர்ந்த உள்ளம் இனி வரும் இளைய தலைமுறைகளுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக தமிழக அரசு வழங்கிய பரிசு தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு திருப்பி அளித்திருக்கிறார்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு தினத்தில் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
தமிழக அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது அதற்கு பரிசு தொகையாக வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பணத்தை அதனுடன் சேர்த்து தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து தமிழக அரசின் முதல்வரின் நிதிக்கு வழங்கியிருக்கிறார்.
இன்றைய இளைஞர்களுக்கு இது மிகப் பெரிய வரலாற்றுப் பாடம்.
உழைக்காமலேயே சம்பாதித்து விட வேண்டும் பணம் மட்டுமே வாழ்க்கை என்று இருக்கிற இந்த காலகட்டத்தில் கல்வியும், அறிவும், உழைப்பும், நேர்மையும் மட்டும் இருந்தால் சமூகத்தில் நாம் என்றைக்கும் உயர்ந்தவர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் ஐயா நல்லகண்ணு.