Chennai Reporters

ரவுடிகளை அடக்கும் திமுக அரசு?

ரௌடி காஞ்சிபுரம் தியாகு.

தமிழகத்தின் பிரபல ரௌடிகளில் முக்கியமானவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி தியாகு அரியானாவில் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி தியாகு என்கிற தியாகராஜனை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

சென்னை மற்றும் புற நகரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பல ரௌடி கும்பல் செயல்பட்டு வருகிறது.இந்த கும்பல்தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தனியார் கம்பெனி முதலாளிகள் என பல பேரிடம் மாமூல் பெற்று பந்தாவாக வலம் வந்தனர்.

இந்த ரௌடிகளுக்கு காவல் துறையில் உள்ள சிலரே உதவியாக செயல்பட்டு வந்தனர். அதற்காக கைமாறாக பல விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெற்று வருகின்றனர். இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானது.

இதற்கு முடிவு கட்ட தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி வெள்ளை துரையை சிறப்பு பணிக்காக வரவழைத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ரௌடிகளை ஒடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரட்டை கொலை செய்த இருவரை சில மணி நேரங்களிலேயே போலீசார் சுட்டுக் கொன்றார்கள்.

இரட்டை கொலை பின்னணியில் படப்பை குணா என்கிற குணசேகரன் இருப்பதாக சிறப்பு படைத் தலைவர் வெள்ளை துறைக்கு தெரிய வந்தது.அதன் பேரில் குணாவை பிடிக்க முயன்றபோது ரௌடி குணா எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதற்கு போலீசில் உள்ள சில கறுப்பாடுகள் உதவி செய்ததாகதெரியவந்தது.இதை அறிந்த வெள்ளைதுரை டீம் யாரெல்லாம் கறுப்பாடுகள் என்பதன் பட்டியலை டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதனை தொடர்ந்து 6 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 40 போலீசாரை தென்மாவட்டங்களுக்கு அதிரடியாக டிஜிபி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.அதற்கு முன்னதாக படப்பை குணாவின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

இத்தனைக்கும் அவர் பாஜகவில் சேர்ந்தது தெரிந்த பிறகு தான் இந்த கைது நடந்தது. காஞ்சிபுரம் ரௌடி டீமை அடியோடு ஒழிக்க வெள்ளைதுரை முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி வேட்டை தொடங்கியது.காஞ்சிபுரம் ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னரும் அங்கு ரௌடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது. ரௌடிகளின் வசூல் வேட்டை கட்ட பஞ்சாயத்து என குற்ற செயல்கள் அதிகரிக்க தொடங்கியது.

படப்பை குணா

இதில் படப்பை குணா மற்றும் தியாகு என்கிற தியாகராஜன் ஆகியோரை சிறப்பு படை அமைத்து தேடி வந்தனர்.இதில் தியாகு வெளிமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த தியாகுவை போலீசார் கைது செய்தனர் ரௌடி தியாகு ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார்.

யார் இந்த தியாகராஜன் காஞ்சிபுரம் ரவுடியான பொய்யா குளம் தியாகு என்கிற தியாகராஜன் போலீசார் சிலருக்கு நண்பன் என்று கருதப்பட்டவர் ஸ்ரீதர் தற்கொலைக்கு பிறகு அவர் இடத்தை பிடிக்க வேண்டுமென்று நினைத்தார்.

தியாகு காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு ஜவுளி வியாபாரிகள் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரை மிரட்டி பணம் பறித்து வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருப்பினும் ரௌடி மாமுல் வாங்குவதை தியாகு விடவில்லை.2018 ம் ஆண்டு காஞ்சிபுரம் எஸ்.பி.யின் ஸ்பெஷல் டீமில் உள்ள பெரும்பாலோனோர் காஞ்சிபுரம் லோக்கல் போலீசார் சிலர் தியாகுவுக்கு நெருக்கமாக இருந்து வந்தனர்.

ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை

தியாகுவை என்கவுண்டர் செய்யக்கூடும் என காவல் துறை நண்பர்கள் சிலர் அறிவுறுத்தலின் பேரில் அவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்து தப்பித்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் எஸ்.பி ஸ்பெஷல் டீமில் உள்ள காவல் ஆய்வாளர் மணிமாறன் சீனிவாசன் ஆகியோர் ரௌடி தியாகு உடன் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று அப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்படி ஆடியோ காவல்துறையினருக்கும் ரௌடிகளுக்கும் உள்ள நெருக்கத்தை அம்பலப்படுத்தியது.ஆனால் அப்போதைய ஆட்சியாளர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு தியாகுவின் அம்மா பவானி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பல ரவுடிகளுக்கு ஒயிட் காலர் எனப்படும் வி.ஐ.பி களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் சென்னை வேலூர் ராணிப்பேட்டை செங்கல்பட்டு ஆகிய பகுதியில் உள்ள ரவுடிகள் மீது வேட்டை தொடரும் என்கிறார்கள் ஏ.டி.எஸ்.பி வெள்ளைதுரை தரப்பினர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!