chennireporters.com

துர்கா ஸ்டாலின் பெயர் சொல்லி கல்லாக்கட்டும் திருவள்ளூர் சுகாதாரத்துறை இயக்குனர் ஜவஹர்.

 #SPCIAL STORY; HEALTH@ PART ONE: THIRUVALLUR. 

லஞ்சம் என்றாலும் ஜவகர், ஊழல் என்றாலும் ஜவகர். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துனை இயக்குனராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஜவஹர் கடந்த நான்கு வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.  இவர் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்று அவரது துறை சார்ந்த அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மற்றும் துறை அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்ப பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணிக்கு இவர் சேர்ந்தது முதல் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள கம்பெனிகளுக்கு துப்புரவு சான்றிதழ் வழங்குவதற்கு கம்பெனி ஒன்றுக்கு 20000 முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கி வருகிறார் என்றும் டெங்கு, மலேரியா மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்று காலத்தில் கொசு மருந்து அடிப்பதற்கு அரசு பணம் வழங்கும். அதாவது டீசல் போடுவதற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அந்த பணத்தை  முழுவதையும் அவர் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறாராம்.

Aval Vikatan - 08 June 2021 - துர்கா ஸ்டாலின் ...

                                                             திருமதி: துர்கா ஸ்டாலின்

அதே போல ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதில் ஊழல் ,ப்ளீச்சிங் பவுடர், கிளவுஸ், குப்பை கூடை வாங்குவதில் ஊழல். எங்கும் ஊழல் எதிலும் ஊழல். இவர் செய்த ஊழலில் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகள் தோற்று போய்விடுவார்கள் சக அதிகாரிகள்.

மத்திய அரசு திட்டமான காய கல்ப திட்டத்தில் ஊழல் மருத்துவமனை ஒன்றுக்கு 25 ஆயிரம் ஜவஹருக்குக்கு தர வேண்டும். அப்படி தராத மருத்துவமனைக்கு  மேற்கண்ட மருத்துவமனைக்கு ஆய்வு செய்து அபராதம் விதித்து விடுவார் என்கிறார்கள் டாக்டர்கள் சிலர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் 13 சித்த மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.அதில் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தான் பணி வழங்கினார்.அதேபோல சமீபத்தில் போடப்பட்ட பல் மருத்துவர் பதவிகளுக்கும் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டுதான் பதவி வழங்கினார்.

 

                                                                   துனை இயக்குனர் ஜவஹர்

தீபாவளி காலங்களில் துப்புரவு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குகிறார். ஹெல்த் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டதிலும் பெரும் ஊழல் நடந்துள்ளது. அது தவிர மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் தீபலட்சுமி உடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறாராம். தீபலட்சுமி கடந்த பத்து வருடங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்.மேலும் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் பெயர் சொல்லி இவர் கோடி கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

எனவே தாங்கள் இந்த செய்தியை விசாரித்து வெளியிட வேண்டும் இப்படிக்கு திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் சங்கம். என்கிற பெயரில் ஒரு புகார் கடிதம் நமது அலுவலகத்திற்கு வந்தது.  அந்த புகார் கடிதம் தொடர்பாக நாம் களத்தில் இறங்கி விசாரித்தோம்.
நாம் விசாரித்ததில் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துனை இயக்குனர் ஜவகர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்தது.

                                                                         ஆல்ஃபி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 ஒன்றியத்தில் உள்ள 49 ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துனை இயக்குனராக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை பகுதி நேர செவிலியர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் பல பேர் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்துள்ளார். அது தவிர கிராமப்புற செவிலியர் அலுவலக உதவியாளர்கள் என தனது துறையின் கீழ் தேவைப்படும் பணியாளர்களை பலரை பணம் வாங்கிக்கொண்டு நியமனம் செய்துள்ளார். அப்படி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒருவரை கூட தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை எல்லாம் பணத்தின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள உளுந்தை என்கிற கிராமத்தில்  முதலமைச்சருக்கு சொந்தமாக அவுட் ஹவுஸ் உள்ளது. அந்த இடத்தை நிர்வகிக்கும் ஒரு திமுக முக்கிய புள்ளியுடன் கூட்டு வைத்துக் கொண்டு இதே இடத்தில் தொடர்ந்து பணியாற்ற முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களை சந்தித்து பணி நீட்டிப்பு செய்து கொண்டதாக சொல்கிறார்கள் அலுவலக ஊழியர்கள்.  அது தவிர கடந்த மாதம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை ஒன்று வாங்கி சென்று முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கியதாக சொல்கிறார்கள் டிடி ஆபிஸ் ஊழியர்கள். அது உண்மையிலேயே துர்கா அவர்களுக்கு வழங்கினாரா? இல்லை அவர் பெயர் சொல்லி இவர் வேறு யாருக்காவது கொடுத்தாரா என்று விசாரணை நடத்தினால் தான் தெரியும்.  அது தவிர சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு முக்கிய விஐபியுடன் ஜாலி மூடீல் கும்மாளம் அடித்ததாக சொல்கிறார்கள்.

                                                          துனை இயக்குனர் ஜவஹர்

இது குறித்து நாம் சுகாதாரத்துறை துனை இயக்குநர் ஜவகர் அவர்களை தொடர்பு கொண்டு அவரது கருத்தை அறிய முயன்றோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. வாட்ஸ் அப்பில் நமக்கு வந்த புகார் குறித்து விளக்கம் கேட்டோம்.  அவர் அதற்கு இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் சித்த மருத்துவர்கள் நான் நியமனம் செய்யவில்லை. பல் மருத்துவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து அவர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அது தொடர்பாக நீங்கள் சுகாதாரத்துறை வட்டாரத்தில் கேட்டு விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்தி அனுப்பி இருந்தார்.

துனை இயக்குனர் ஜவகர் அந்த அலுவலகத்தில் தனது உதவியாளராக இருந்த ஒரு முக்கிய புள்ளி இவருக்குத் தெரியாமல் அவர் தனியாக கல்லா கட்டி விட்டாராம் அதனால் அவர் தற்போது இந்த அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு தூக்கி அடித்து விட்டார் என்கிறார்கள் அலுவலக ஊழியர்கள். அது தவிர டாக்டர் ஜவகர் பெண் ஊழியர்கள் பெண் டாக்டர்கள் என்றால் கொஞ்சம் கரிசனத்துடனும் அன்பாகவும் பேசுவாராம் மற்றபடி அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவரையும் தரை குறைவாகவும் மரியாதை குறைவாகவும் அவமரியாதையாகவும் பேசி வருகிறாராம். அது தவிர தனக்கு மாதம் சரியாக கப்பம் கட்டாத ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாக அதிகாரிகளை மிரட்டி வருகிறாராம். தற்போது அண்ணா நகரில் வசித்து வரும் ஜவகர் சில மாதங்களுக்கு முன்பு  போரூரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம்.

                                                          துனை இயக்குனர் ஜவஹர்

இவரது மனைவி அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளில் நிறைய விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் மாசுவின் அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கும், செயலாளர்களுக்கும் மாதந்தோறும் கப்பம் கட்டி வருவதாக தனக்கு வேண்டப்பட்ட முக்கிய நபர்களிடம் மாறு தட்டி சொல்லிக் கொள்கிறாராம்  ஜவஹர். தன்னை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது பணி மாற்றமும் என்னை செய்ய முடியாது முதலமைச்சரின் கிச்சன் கேபினெட்டில் நான் அரசியல் செய்கிறேன் என்கிறாராம் ஜவகர்.

                                                                         ககன் தீப்சிங் பேடி

அது தவிர மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் முக்கிய உதவியாளர் ஒருவரிடமும் எனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்கிறார் ஜவகர். தற்போது ஜவஹர் காட்டில் பண மழை கொட்டுகிறதாம்.  இந்த புகார்கள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது தனி நபர் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தினால் ஜவஹரின் ஆட்டம் தெரிந்து விடும் என்கிறார்கள ஜவஹர்லால் பாதிக்கப்பட்ட சில ஊழியர்கள்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்ஃபி ஜான் வர்கீஸ் ஜவகர் கூட்டணி அமைத்துக் கொண்டு இவர்கள் அடித்த கூத்தும் கொள்ளையும் சொல்லி மாளாது என்கிறார் கலெக்டர் ஆபீசில் பணியாற்றும் ஒரு முக்கிய அதிகாரி.  இந்த புகார்கள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை எந்த ஆய்வும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாட்டையை சுழற்றுவாரா அமைச்சர் மா.சு. ஜவஹரின் பதவி காலியாகுமா அல்லது தப்புமா என்று பொறுத்திருந்து தான் பார்க வேண்டும். 

#chennaireporters.com @chennaireporterweb #chennaireportes.com tamil news.

இதையும் படிங்க.!