chennireporters.com

#thiruvallur ; திருவள்ளூர் தொகுதியில் சூரிய வெளிச்சத்தில் ஓங்கும் கை. வெற்றியின் விளிம்பில் சசிகாந்த் செந்தில்.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் திமுக கூட்டணியில் திருவள்ளூர் தனித் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய முகமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணக்கமாக செயல்பட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அது தவிர மாவட்டத்தில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள மாவட்ட தலைவர் ஏ.ஜி சிதம்பரம் போன்ற  மூத்த தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் இனக்கமாக செயல் பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பணிகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து வெற்றி பெற்றவுடன் செய்தி தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பாஜகவை சேர்ந்த பாலகணபதி மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம்  சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அது தவிர அதிமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்து நிற்கும் தேமுதிக வேட்பாளர்  நல்ல தம்பி என்பவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்.

அதிமுக கூட்டணி மீது மக்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போனது. எனவே அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜகதீஷ் சந்தர் தேர்தல் உறுதிமொழியை படிக்கத் தெரியாமல் திணறினார். எப்படி படிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி சொல்லிக் கொடுத்தும் கூட அவர் படிக்கத்தெரியாமல்  திக்கித் திணறினார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. படிக்கத்தெரியாதவரை சீமான் வேட்பாளராக நிற்க வைத்துள்ளார் என்று கிண்டல் செய்து கமன்ட் அடித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள  வேட்பாளர் தமிழ்மதி  மக்கள் மத்தியில் இன்னும் யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பலமாக இருப்பதால் உதயசூரியன் வெளிச்சத்தில் கை சின்னம் ஓங்கி  நிற்கிறது. இதனால் சசிகாந்த் செந்திலின் வெற்றி இப்போது உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொல்லுகின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

முன்னாள் எம்பி ஜெயக்குமார் தேர்தல் வாக்குறுதிகளாக தந்த விஷயங்கள் எதையுமே செய்து முடிக்கவில்லை எனவே அவர் அளித்த வாக்கு உறுதிகளையும் தான் தற்போது செய்ய வேண்டிய வாக்குறுதிகளையும் சேர்த்து சசிகாந்த் செந்தில் நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் தொகுதி மக்கள்.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்காத நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பலமாக இருந்தும் தற்போது அவர்களின் நிலை திரிசங்கு நிலையாக இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லுகின்றனர் தொகுதி மக்கள்.

இதையும் படிங்க.!