chennireporters.com

கிராம சபை கூட்டம் நடத்த முடியாது; கலெக்டரால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. திமுக பஞ்சாயத்து தலைவர் அதிரடி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் புழல் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் (பாரதி சரவணன் ) நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்து வருகிறோம்  என்று அந்த பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ்.

விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பாரதி சரவணன் ஒரு முறை கூட கண்ணம்பாளையம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் இதுவரை  நடத்தப்படவில்லை. குடியரசு தினத்தில் கிராம சபை நடத்தவேண்டும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில்  கூட  கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. 

மழை நீர் வடிகால்வாய் மற்றும்  நீர் பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.

பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்காமல் வைத்திருக்கிறது ஊராட்சி நிர்வாகம்.

அம்மா பார்க் மற்றும் அதில் உள்ள பொது கழிவறையை இதுவரை திறக்காமல் உள்ளது. இதனால்  அரசின் பல லட்ச ரூபாய் பணம் வீணாகியுள்ளது.

அரசிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பத்திரப்பதிவு செய்யவும் பட்டா பெறவும் சொத்துவரி ரசீதுகள் கொடுத்த ஊராட்சி நிர்வாகம் தலைவர் பாரதி சரவணன் மீது  இது வரை  மாவட்ட நிர்வாகமும் புழல் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதின் மர்மம் என்ன?

நிலத்தடி நீர் திருட்டை தடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் புழல் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்தும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

பாரதி சரவணன்

அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள், தொழிற் கூடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தொழில்வரி, பலவகை ரசீது மற்றும் வீட்டு வரி ரசீதுகள் கொடுத்து அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி தலைவர் பாரதி சரவணன் மட்டும் பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்று தன் குடும்பத்தை மட்டும் வளப்படுத்திக்கொண்டார். அவர்  மீது உள்ளாட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் புழல் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

இது போன்ற  பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத பஞ்சாயத்து தலைவரையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் புழல் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று பொதுமக்கள் கண்ணம்பாளையம் கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடத்தில் மட்டும் தான் கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேற்படி பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பல புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு மாதவரம் திமுக எம்எல்ஏ சுதர்சனம் தான் காரணம் என்கின்றனர் அந்த பகுதி கிராம பொதுமக்கள். பஞ்சாயத்து தலைவரின் கணவர் சரவணன்  திமுகவின் ஒன்றிய செயலாளராக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார் என்று வெளிப்படையாக பேசுகின்றனர் அந்த பகுதி மக்கள்.

 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளங்காடு பக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டு காலமாக கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை எனவும், அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலையில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளாததை கண்டித்தும், கண்ணம்பாளையம் கிராம பொதுமக்கள் வீடுகள் தோறும் மற்றும்  ஊர் முழுவதும் கருப்புக் கொடி கட்டியும், பேனர்கள் வைத்தும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து கண்ணம்பாளையம் கிராம பொதுமக்களிடம் கேட்ட பொழுது தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கருப்புக் கொடி மற்றும் பேனர்களை அகற்ற போவதில்லை எனவும் இனி வரும் அனைத்து தேர்தல்களையும் கண்ணம்பாளையம் கிராம பொதுமக்கள் சார்பாக புறக்கணிப்போம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.  புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் பிரபு சங்கர் விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பாரதி சரவணன் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க.!