திருநின்றவூரில் அலிஸ் என்கிற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.இங்கே வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைக்கு முன்பாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இனிப்புகள், பானி பூரி, காலிபிளவர் பக்கோடா போன்றவை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநின்றவூர் பெரியார் நகரை சேர்ந்த பானு என்பவர் அந்த கடையில் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியிருக்கிறார். வீட்டிற்கு எடுத்துச் சென்ற பானு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய தங்கைக்கு திடீரென பகோடா சாப்பிட்ட சில நிமிடங்களில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.அப்போது பக்கோடாவில் காயத்திற்கு ஒட்டப்படும் பேண்டேஜ் இருந்தது இருந்துள்ளது.
அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலிஸ் கடைக்கு வந்த பானு கேட்டதற்கு கடை காரர்கள் முறையான பதில் அளிக்காமல் பானுவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பானு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் மற்றும் சங்கரன் ஆகியோர் அலிஸ் சூப்பர் மார்கெட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அங்கு பக்கோடா விற்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் பொருட்களை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.
இதற்கிடையில் பூந்தமல்லி சுகாதார ஆய்வாளர் பிரபு தலைமையில் அலிஸ் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றும் ஊழியர்கள் விதிமுறைகளை கடை பிடிக்க வில்லை என்று சூப்பர் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அலிஸ் நிர்வாகத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. அலீஸ் நிர்வாகத்தினர் திருவள்ளூர் ஆவடி திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றனர் தொடர்ந்து அந்த கடை நிர்வாகத்தின் மீது பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.