சென்னை புளியந்தோப்பு நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ் பிரபல ரவுடி . இவர் கடந்த 18ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அரக்கோணத்தை சேர்ந்த ஜெயபால் , சென்னை எம்ஜிஆர் நகர் யமஹா மணி , திருவள்ளூர் அரண்வாயல் குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி நீதிமன்றத்தில் திருநெல்வேலியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார், முத்துக்குமார், சரண் ஆகியோர் சரணடைந்தனர்.
கொலையாளிகளுக்கு கார் ஓட்டியதாக மோகன் என்பவரும் சரணடைந்தார். செந்தில்குமார், முத்துக்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் பட்டினம்பாக்கம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது.ஆற்காடு சுரேஷ் செய்த குற்றங்களில் முக்கியமானது சின்ன கேசவலு அவரது வலது கரமான ராதாகிருஷ்ணன், தென்னரசு ஆகியோரை கொலை செய்திருந்தான் ஆற்காடு சுரேஷ். அதற்கு பழி வாங்க அவரது தம்பி பாம் சரவணன் சபதம் எடுத்து பல ஆண்டுகளாக ஆற்காடு சுரேஷ் அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்து வந்தார்.இந்த நிலையில் கொலை நடந்த அன்று கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் பாம் சரவணன் ஆயுதத்துடன் உட்கார்ந்து இருந்தார். செந்தில்குமார், முத்துக்குமார் ஆகியோரும் பாம் சரவணன் குறித்து பல முக்கிய தகவல்களை போலீசாரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்தால் பல உண்மை தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.ஆற்காடு சுரேஷ் ஆந்திரா மற்றும் பெங்களூர் போன்ற பகுதிகளிலும் கூலிக்காக பல கொலைகளை செய்ததாக கூறப்படுகிறது. அது தவிர செம்மர கடத்தலிலும் அவர் ஈடுபட்டார் என்று சொல்லுகிறார்கள் போலீசார். இந்த நிலையில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சில தினங்கள் கழித்து சென்னை செங்குன்றத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்தீபன் நடை பயிற்சி சென்றபோது மர்ம கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் வெட்டி கொலை செய்து தப்பியது இந்த இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர் போலீசார்.