chennireporters.com

சீறிப்பாய்ந்த சிறுத்தைகளின் திருச்சி மாநாடு. உற்சாகத்தில் திருமா…

#பிரத்தியேக புகைப்படங்கள் மற்றும் வீடியோ

விசிக அது ஒரு சாதிக்கட்சி என்று பேசுகிற சில சாதி அமைப்புகள், மற்றும் சாதிக்கட்சிகள் அனைத்தும் திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகளின் மாநாட்டை கண்டு அரண்டு, மிரண்டு போய் கிடக்கிறதாம்.

ஒரு கட்சி நடத்தும் மாநாட்டில் மட்டன் பிரியாணி சிக்கன் மீன் போடாமல் ஒரு மாநாட்டை நடத்தியது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என்கின்றனர். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி எடுத்து வர வேண்டும் என்று திருமாவளவன் ஏற்கனவே உத்தரவு போட்டு இருந்தாராம்.

தமிழ்நாட்டில் இருக்கும் சில கட்சிகள் மாநாடு நடத்தினால் பிரியாணி போட்டும், வாட்டர் கொடுத்தும், கூட்டம் வருவதில்லை ஆனால் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுக்காத விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு வந்த தொண்டர்களில் பார்த்து டெல்லி பாரதிய ஜனதா மேலிடமே மிரண்டு கிடக்கிறதாம். அந்த அளவிற்கு கூட்டம் கூடி இருக்கிறது.

திருச்சியில் மாநாட்டை கூட்டி தமது பலத்தை காட்டியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.  இந்த சந்தோசத்தில்  வரும் 30-ந் தேதி திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது விசிக. இப்பேச்சுவார்த்தையில் 3 தொகுதிகளை கேட்பது என விசிக தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி),  விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர்.  தற்போதும் திமுக தலைமை விசிகவுக்கு இதே 2 தொகுதிகளை ஒதுக்கலாம் என நினைக்கிறதாம்.

திருமாவின் கொள்கை பற்றி மாநாட்டில் கர்ஜித்து பேசியிருக்கிறார் திருமா. திமுகவைப் பொறுத்தவரை விசிகவை கூட்டணியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.  திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில், திருமாவளவன் குறித்து நெகிழ்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமாவளவன், விசிக குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்பதற்கு இலக்கணமாகத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் அருமைச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் படை வீரர்கள் ஜனநாயகம் காக்க கூடியிருக்கிறீர்கள்.

இப்படி முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் தலைவர் திருமா எழுந்து நின்று கை தட்டினார். விசிக தொண்டர்களும் அப்போது  வின்னை அதிரும் அளவிற்கு விசில் சத்தங்களும் கை தட்டல்களின் சத்தங்களும் அடங்குவதற்கு சில நிமிடங்களானது.  அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களை அவர் சட்டக்கல்லூரி மாணவராக – மாணவர் தி.மு.க.வில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும்! அப்போதே கல்லூரி மேடைகளிலும் – கழக மாணவரணி மேடைகளிலும் அவரின் பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும்!

தோளோடு தோளாக நிற்கும் திருமா: நாள்தோறும் கொள்கை உரம் வலுப்பெறும் இளம் காளையாகத்தான் இன்றைக்கும் ஜனநாயகம் காக்க இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அன்றைக்குக் கழகத்துக்குள்ளே முழங்கினார். இன்றைக்கு கழகக் கூட்டணிக்குள் இருந்து முழங்கி வருகிறார்.

சகோதரர் திருமா அவர்கள், எப்போதும் – எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு உள்ளே இருப்பவர்! மன்னிக்கவும் நமக்குள்ளே இருப்பவர்! தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் தோளோடு தோளாக துணை நிற்பவர் சகோதரர் திருமா அவர்கள்.

கொள்கை உறவாளர்கள்: நாங்கள் எப்போதும் தமிழினத்தின் வலிமைக்கு உரம் சேர்க்கும் அடிப்படையில்தான் இணைந்து இயங்குகிறோம். நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவு அல்ல; அரசியல் உறவு அல்ல;

கொள்கை உறவு! தந்தை பெரியாரையும் – புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலாவது பிரிக்க முடியுமா? அதுபோலதான், திராவிட முன்னேற்றக் கழகமும் – விடுதலைச் சிறுத்தைகளும் என அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு வரும் 30-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு அதே 2 தொகுதிகளை வாங்கி கொள்ளலாம் என பேச இருக்கிறதாம். ஆனால் விசிக தரப்பில் மொத்தம் 3 தொகுதிகளை கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். திருச்சி மாநாட்டில் திருமாவளவன் காட்டிய வலிமை, பாமக இல்லாத சூழ்நிலையில் வடதமிழ்நாட்டில் வாக்கு வங்கியை வலிமையாக தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திமுக தலைமை விசிகவுக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்குமா? என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும். திருச்சி மாநாட்டு விழா துளிகள்.திருச்சி விசிக மாநாட்டின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கிற எல்லா கட்சிகளும் அதன் கட்சித் தலைவர்களும் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் விருதுகளையும் சால்வையும்  அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க.!