பதினாறு வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர அத்தை கைது செய்யப்பட்ட செய்தி சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Sexual harassment #child protection #violate a child’s dignityசிறுமியை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பகுதியில் சிறுமியை அவரது சொந்த அத்தையே பாலியல் தொழில் ஈடுபடுத்துவதாக கடந்த ஒன்றாம் தேதி கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கண்ணகி நகர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பேரில் துணை ஆணையாளர் உமையாள் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் சிறுமியை அவரது அத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார். செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த மாதம் பள்ளி விடுமுறை நாளில் கண்ணகி நகர் பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமிக்கு விலை உயர்ந்த செல்போன், மற்றும் ஆடைகள் ,அழகு சாதன பொருட்கள் வாங்கி தருவதாக அவரது அத்தை ஆசை வார்த்தை கூறியுள்ளார். நான் சொல்லும்படி நீ செய்தால் உடனடியாக இந்த பொருட்களை உனக்கு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நான் சொல்லும் படி நீ நடந்து கொண்டால் உன் வாழ்க்கை ஜாலியாக இருக்கும் நீயும் ஜாலியாக இருப்பாய் என்று கூறியுள்ளார்.
நிறைய பணமும் கிடைக்கும் என்று மூளை சலவை செய்துள்ளார். அதை வைத்து ஆடம்பரமாக வாழலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி ஏமார்ந்த அந்த சிறுமி நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். இதை அடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குஅந்த சிறுமியை அழைத்துச் சென்ற அவரது அத்தை அங்கு ஒரு வாலிபரிடம் பணம் வாங்கிக் கொண்டு வேளச்சேரியில் உள்ள வீட்டில் தங்க வைத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் இது வேண்டாம் என்று சிறுமி கூறியும் அவரது அத்தை கட்டாயப்படுத்தி சிறுமையை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய சிறுமி இது பற்றி தனது தந்தையிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை கண்ணகி நகரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக அடித்து கத்தியால் வெட்டியுள்ளார். இது குறித்த புகார் கொடுத்ததில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் அளித்த தகவலின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் சிறுமியின் அத்தை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழிகள் இரண்டு பேரை போலீசார் கண்ணகி நகரில் வைத்து கைது செய்தனர். அங்கிருந்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என ஆசை வார்த்தை கூறி சிறுமியை அவரது அத்தையே பாலியல் தொழில் ஈடுபடுத்தி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய வளரும் அறிவியல் முன்னேற்றத்தில் குழந்தைகள் செல்போன் மற்றும் லேப்டாப் ஆசைப்பட்டு நாம் என்ன செய்கிறோம். அதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை கூட அறியாமல் செயின் திருட்டு, மோட்டர் பைக் திருட்டு, செல்போன் திருட்டு, இப்படி பாலியல் கொடுமை என எல்லா பிரச்சினைகளிலும் சிக்கி சீரழிந்து வருகின்றனர், இன்றைய இளைய சமூகம் பாழடைந்து கிடப்பதற்கு சமூக ஊடகங்களேகாரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். பெற்றோர்களும் குழந்தைகள் பராமரிப்பில் தனி கவனம் செலுத்தவேண்டும். சமூக வலைதளங்களில் கங்கெடுப்பதை குழந்தைகள் தவிற்கவேண்டும். பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி குழந்தைகளை கண்கானிக்கவேண்டும்.