chennireporters.com

”தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய” விளாங்காடு பாக்கம் பஞ்சாயத்து தலைவர். பாரதி சரவணன்.

வேட்புமனுவில் குற்றப் பின்னணியை மறைத்து பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ள விளாங்காடுபாக்கம் தி. மு. க ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன்  என்பவர்  கடந்த 2012 -ம் ஆண்டு ஊராட்சி நிதியிலிருந்து ரூ.6,99,509 தொகையை முறைகேடு செய்த காரணத்தால்  கலெக்டர் இவரது செக் பவர் அதிகாரத்தை பறித்தார். 

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் கடந்த 2011 – 2012 மற்றும் 2012 – 2013 ஆம் ஆண்டு நிதியாண்டில் ஆய்வு செய்து ஊராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தியதற்கு கடந்த 31-08-2012 அன்று ஊராட்சிகள் சட்டம் 1994-ம் ஆண்டு பிரிவு 203 ல் பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கு வழங்கப்பட்ட நிதி செயல்பாட்டிற்கான அதிகாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாயத்து தலைவர்  பாரதி சரவணன்.

இது குறித்து  அப்போதைய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி  28.8.2012 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அந்த உத்தரவில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பாக்கம் ஊராட்சி ஆவணங்களை  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருவள்ளூர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. கடும் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.ஊராட்சி செலவினங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுத்த அனுமதி அளித்து உத்தரவிடுதல் தொடர்பாக,  திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடு பக்கம் ஊராட்சி ஆவணங்களை உதவி இயக்குனர் (ஊராட்சிகள் ) திருவள்ளூர் அவர்களால் 25.5. 2012 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விளங்காடு பாக்கம் ஊராட்சியில் மேற்கொண்ட அனைத்து செலவினங்களும் விதிமுறைகளை கடைபிடிக்காமலும் ரொக்க புத்தகத்தில் பதிவுகள் இல்லாமலும் செலவு சீட்டுகள் மற்றும் பட்டியல்கள் இல்லாமலும் ஊராட்சி நிதியிலிருந்து ரூ. 699509 ஆறு லட்சத்து 99 ஆயிரத்து 59 ரூபாய் எடுத்து முறைகேடாக செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 கலெக்டர் போட்ட உத்தரவு கடித நகல்.

விளங்காடு பாக்கம் ஊராட்சியில் உள்ள கடந்த 2011- 12 மற்றும் 2012 -13-ம் நிதி ஆண்டில் செலவினங்கள் ஆய்வு செய்ததில் ஊராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருவதால் இந்நிதி இழப்பினை உடனடியாக தவிர்க்கும் பொருட்டு ஊராட்சியின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203ல் அளிக்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி விளங்காடுபாக்கம் ஊராட்சிகளின் நிதி செயல்பாட்டினை வட்டார வளர்ச்சி அலுவலர் கிளை ஊராட்சிகள் புழல் செயல்படுத்த அனுமதி வழங்கி இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என்று ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்

பஞ்சாயத்து தலைவர் பாரதி சரவணன்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் பாரதி சரவணன் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட உறுதி மொழி பத்திரத்தில்  வேட்பு மனு தாக்களில் படிவம் 3 மற்றும் 3-A வில்  வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்து அரசு நிதியை முறைகேடு செய்ததை மறைத்து  விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.  அப்போது அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்யவில்லை. அது தவிற அவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர்.  இது குறித்து விளாங்காடு பாக்கத்தை சேர்ந்த ராஜ் என்பவர் தமிழக தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்து தலைவர் பாரதி சரவணன் மீது புகார் அளித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க.!