chennireporters.com

#coimbatore district dubakur; போலீ பத்திரிகையாளர்கள் மற்றும் சங்கங்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

#covai district  #tiruppur district #take action I #covai collecto I #cuddalore sp #dubakkur reporters # fruad reporters union #vadavalli police station

#coimbatore district  கோவை மாவட்டத்தில் இயங்கும் போலி பத்திரிகையாளர்கள்  மற்றும்  போலி பத்திரிகையாளர்கள் சங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலர் போலியின் ராஜா கதிர்குரல் சிவக்குமார்.

கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கில்மோர் என்பவர் புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது; நான் அக்னி கதிர் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி வடவள்ளி காவல் நிலையத்தில் அருண் ஹென்ரிக்ஸ் என்ற போலீ ரிப்போட்டர் மீது  புகார் ஒன்று அளித்திருந்தேன். அந்த புகார் மீது FIR போடப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லை. மேலும் புகார் சொல்லப்பட்ட அருண்ஹென்ரிக்ஸ்  என்பவர் தகவல் ஒளிபரப்பு மற்றும் புத்தகப் பதிவு சட்டத்தின்படி ( RNI ) பதிவு

Registrar of Newspapers for India (RNI) is an attached office of the Ministry of Information and Broadcasting and a statutory office under Section 19(A) of the Press & Registration of Books Act, 1867. PRESS & REGISTRATION OF BOOKS ACT, 1867.
செய்யப்படாத பத்திரிகையில் இணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து வருகிறார். இதே பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என்று சொல்லிக் கொள்ளும் போலி நிருபர் சிவக்குமார் என்பவர் கடலூர் மாவட்டம் நல்லூர் என்ற கிராமத்தில் சுயேச்சை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். மேலும் அவர் மீது ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீதும் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஃபிராடு ரிப்போட்டர்கள்  சஃவிராஜா மற்றும் சௌந்தரராஜன்.
சௌந்தரராஜன் அவரது அடையாள அட்டையில் தான் வேலை செய்யும் இடம் ஆல் ஓவர் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை மிரட்டி நாங்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் என்று ஊரை ஏமாற்றி வரும் அரசு அனுமதி பெறாத கதிர்குரல் ஆசிரியர் சிவக்குமார் மற்றும் இணை ஆசிரியர் அருண் ஹென்ரிக்ஸ்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். .
RNI இல்லாமல் செயல்படும் மாத இதழ் கதிர்குரல்.
மேலும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் போலி பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் சங்க நிர்வாகியின் நிர்வாகிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பத்திரிகையாளர்களை காவல்துறையினர் ஊக்குவிப்பதால் தான் 160 க்கும் மேற்பட்ட போலி நிருபர்களும் பல சங்கங்களும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
போலீ பத்திரிகையாளர் அருண் ஹென்ரிக்ஸ்.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உரிய விசாரணை நடத்தி போலி நிருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். மேலும் கடலூர் மாவட்ட எஸ்பிக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக பணியாற்றும் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் ஆக பணியாற்றும் சிவக்குமார் கோயமுத்தூர் பகுதியில் தன்னை பத்திரிகையாளர் என்று பொய் சொல்லி அரசு அதிகாரிகளை மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு அருண் ஹென்ரிக்ஸ்,  மருதாச்சலம், மற்றும்  ரங்கநாதன் ஆகியோர் மீது அக்னிக்கதிர் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான கில்மோர் என்பவர் புகார் அளித்திருக்கிறார் அந்த புகார் ஏற்கனவே நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தேவதாஸ் என்ற பத்திரிகையாளரும் மேற்படி போலி நிருபர் சீட்டிங் பார்ட்டி அருண் ஹென்ரிக்ஸ் மீது புகார் அளித்துள்ளார். அதே போல போலி பத்திரிகையாளரான பிராடு சௌந்தரராஜன் என்பவர் மீதும் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தற்போது நிலுவையில் உள்ளது.

நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் போலியின் ராஜா கதிர்குரல் சிவக்குமார்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் போலி பத்திரிகையாளர்களும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களும் , சங்கங்களும் செயல்பட்டு வருகிறது. ஆனால் கோவை திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் தான் 200க்கும் மேற்பட்ட  போலி பத்திரிகையாளர்கள் 50க்கும் மேற்பட்ட போலி டுபாக்கூர் பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த போலி பத்திரிகையாளர்கள் எனப்படும் டுபாக்கூர்கள் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும்  3 சீட்டு லாட்டரி, கஞ்சா, மது, பிராத்தல், போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று அதாவது மூன்று அல்லது ஐந்துக்கும் மேற்பட்டோர் சென்று பத்திரிகையாளர் சங்கங்கள் என்று தங்களுடைய  போலியாக போட்டு வைத்திருக்கிற அடையாள அட்டையையும் விசிட்டிங் கார்டையும் காட்டி பணம் பறிப்பது தான் இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது என்கின்றனர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர்.RNI இல்லாமல் செயல்படும் மாத இதழ் கதிர்குரல்.

எனவே திருப்பூர் கோவை மாவட்டங்களில் இந்த போலி பத்திரிகையாளர்கள் மற்றும் டுபாக்கூர் பத்திரிகையாளர் சங்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள போலிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க.!