chennireporters.com

சிறைத்துறை “DIG” முருகேசன் பெயரில் மோசடி செய்யும் வட மாநில கும்பல்.

தமிழக சிறைத்துறை டிஐஜி முருகேசன் பெயரில் முகநூலில் ஒரு போலியான கணக்கை உருவாக்கி அவரிடம் நட்பில் உள்ளவர்களின் ஒரு பட்டியலை தயாரித்து அவர்களுக்கு வாட்ஸ் அப்பிலும்  மெசஞ்சரில் ஒரு செய்தியை அனுப்பி மோசடி செய்கிறது குஜராத் மோசடி கும்பல்.

அப்படி தான் திருவள்ளூரை சேர்ந்த பாரதி என்பவரின் மெசஞ்சருக்கும் வாட்ஸ் அப் எண்ணுக்கும் ஒரு  சிறைத்துறை டிஐஜி முருகேசன் அனுப்பியதைப்போல ஒரு செய்தி அனுப்பட்டுள்ளது. அதில் எனக்கு தெரிந்த சிஆர்பிஎப் அதிகாரி ஒருவரின் வீட்டில் வீட்டுக்கு பயன்படுத்தும் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கிறார் அந்த பொருட்களை நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் நானும் பார்த்தேன் பொருட்கள் நன்றாக இருக்கிறது என்று செய்தி அனுப்பியுள்ளார்.

அந்த  செய்தியை இந்த குஜராத் மோசடி கும்பல் சம்பந்தப்பட்ட பாரதி என்பவருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

 

சந்தோஷ் குமார் சிஆர்பிஎஃப் என்பவர் பாரதிக்கு அனுப்பிய மெசேஜ் தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் எனக்கு மகாராஷ்டிராவில் டிரான்ஸ்பர் கிடைத்துள்ளதால் என் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், மோட்டார் பைக், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, லேப்டாப் ஆகிய பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அவரும் பொருட்களை பார்த்துவிட்டு சரி வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் மேற்படி சந்தோஷ் குமார் உடனடியாக தனது கூகுள் ஃபே அல்லது போன் ஃபே நம்பருக்கு பணத்தை அனுப்புங்கள் நான் உங்களுக்கு உடனடியாக பொருட்களை ஏற்றி அனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் நம்பும்படி ஒரு பொருளை லாரியில் எடுத்து கட்டுவதைப் போல வாட்ஸ் அப்பில் ஒரு படத்தையும் அனுப்பியுள்ளார்.

உங்களுடைய பொருட்கள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் உடனடியாக பணம் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இவர் பொருளின் மதிப்பின் பாதி பணத்தை அனுப்புவதாகவும் மீதி பணத்தை பொருட்கள் அனுப்பியவுடன் மீண்டும் உங்களுக்கு தருவதாகவும் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் பொருட்களை அனுப்பாமல் பணத்தை அனுப்பினால் உடனே அனுப்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதில் சந்தேகம் அடைந்த பாரதி தனது நண்பர்கள் மூலம் சந்தோஷ்குமார் என்கிற சி.ஆர்.பி.எப் அதிகாரி  இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். ஆனால் அதுபோன்று யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அவர் இவர்கள் போலியான நபர்கள்  சமூக வலைதளங்களில் பொதுமக்களை ஏமாற்றும் வட மாநில கும்பல் என்று உறுதி செய்து செய்துள்ளார்.

அதன் பிறகு அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் இவரது அழைப்பை எடுக்கவில்லை சில தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரில் போலியான ஒரு கணக்கை உருவாக்கி இது தேவபாரதி என்பவரிடம் அவசரமாக 25 ஆயிரம் பணம் அனுப்புங்கள் தனது கார் ரிப்பேர் ஆகிவிட்டது. உடனடியாக உங்களுக்கு அனுப்புகிறேன் என்று ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.

இவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்  அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அது போலியான செய்தி நம்பாதீர்கள் என்று அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற மோசடிகளில் வட மாநில கும்பல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

சிறைத்துறை டிஐஜி முருகேசன்.

தமிழக போலீசார் உடனடியாக வட மாநில மொசடி கும்பல் மீது   போலீஸ் தனிப்படை  அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த மோசடி கும்பல் வீட்டில் உள்ள பெண்களிடமும் முத்து, பவளம், தங்கப் நகைகள் குறைந்த விலைக்கு தரப்படுவதாகவும் ஏமாற்றும் செய்திகள் whatsapp மற்றும் மெசஞ்சர் மூலம் அனுப்பப்படுகிறது.

எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது போன்ற செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.  முகம் தெரியாத எந்த ஒரு நபர்கள் தன்னுடைய whatsapp எண்ணிற்கோ அல்லது  செல்போன் நம்பருக்கோ மெசேஜ் அனுப்பினால் அதன் மீது எந்தவித பதிலும் சொல்லாமல் இருக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க.!