தமிழகத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் உடன் தொடர்பில் இருந்த போலீஸ்காரர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்தால் தான் மேலும் இது போன்ற தவறுகளை போலீஸ்காரர்கள் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.
கஞ்சா கடத்தல் வேலூர், காட்பாடி வழியாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சாக்கள் காட்பாடி ரயில் நிலையத்திலும், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும் பிடிக்கப்பட்டு இருக்கிறது.
அது தவிர ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, முத்துக்கடை, பெல், புளியாங்கண்ணு, காரை, அவரைக்கரை, தெங்கால் போன்ற பகுதிகளில் சில்லறை வியாபாரத்தில் கஞ்சா கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கஞ்சா வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. அவரக்கரை கிராமத்தை சேர்ந்த செல்வமேரியின் மகன் சுனில், லீமா மகன் ஷாம், கஞ்சா மொத்த வியாபாரி அஞ்சு என்பவரின் மகன் புகழ், மற்றும் ஜெயசீலன் மகன் ஆகியோர் கூட்டாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவைகளின் விற்பனையை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் எடுத்து வருகிறார்.
எஸ்.பி. தீபாசத்யன்
மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட எஸ்.பி. தீபாசத்யன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தற்போது போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஒழிப்பு அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் அவர்களுடைய வங்கி கணக்குகளும் முடக்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற பழக்கங்களுக்கும் யாரும் அடிமையாக வேண்டாம் இராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் சமீபத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர் 24 பேர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 36 பேர் நன்னடத்தையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நண்பர்களுடன் ஒரு சில போலீசாருக்கு தொடர்பு உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
ரமேஷ் ,கண்ணன், வேணுகோபால் .
அதன் பேரில் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதை அடுத்து கஞ்சா விற்பனை செய்யும் நபருடன் மூன்று போலீசார்க்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ரமேஷ் , அரக்கோணம் டவுன் போலீஸ் கண்ணன் மற்றும் சோளிங்கர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் வேணுகோபால் என மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.தீபாசத்யன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற வேறு யாருக்கும் தொடர்பு இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. தீபாசத்யன் தெரிவித்துள்ளார். கஞ்சா வியாபாரிகள் தொடர்பில் இருந்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.