chennireporters.com

#pmk பாட்டாளி மக்களை ஏமாற்றும் பாமக தலைவர் ராமதாசும்,அன்புமணியும்.

# EXSCLUSIVE STORY,  # EXSCLUSIVE STORY,

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே என்ற திரைப்படப் பாடலுக்கு ஏற்றதைப் போல தனது சொந்த சாதி மக்களையே அறிவியல் விஞ்ஞானம் வளர்ந்து வந்த காலத்திலும் இன்னும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணியும் என்கின்றனர் சில படித்த பகுத்தறிவு உள்ள வன்னிய இளைஞர்கள்.

மோடியுடன் அன்புமணி ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஆமை புகுந்த வீடும் அண்ணாமலை புகுந்த அரசியல் கட்சியும் பாழாய் போகும் என்பதைப்போல அண்ணாமலை அன்புமணியிடம் பேசி அன்புமணியும் திடீரென தனது அப்பாவை சமாதானப்படுத்தி மக்களுக்கும் இந்துக்களுக்கும் விரோதமாய் இருக்கும் பாஜகவில் கூட்டணி வைத்துக் கொண்டது பாமக.

மோடியுடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது கட்சியின் நிலைப்பாடு, கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று ஏற்றுக் கொண்டாலும் கூட இவர்கள் செய்த தில்லுமுல்லு சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக்கி வருகிறார்கள் வன்னிய இளைஞர்கள்.  இரண்டு இளைஞர்கள் பாமக  தனது சாதிக்கு செய்த துரோகத்தை பேசும் ஆடியோ இணையத்தில் வைரலானது.

மோடியுடன் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி

இந்த நிலையில் பாமக தலைவர் வேட்பாளர் தேர்வு செய்ததை பற்றி படும் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர் வன்னிய இளைஞர்கள். அதாவது கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அதாவது ராமதாஸ் சம்பந்தி கிருஷ்ணசாமியின் மகன் இன்னும் சொல்லப்போனால் அன்புமணியின் மைத்துனர் அதாவது அன்புமணியின் மனைவி  சௌமியா அன்புமணி உடன் பிறந்த அண்ணன் தான் இந்த விஷ்ணு பிரசாத்.

சௌமியா அன்புமணி

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் காணும் விஷ்ணு பிரசாத்தை எதிர்த்து நிற்பவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இயக்குனர் தங்கர்பச்சான்.  தங்கர்பச்சான் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர். விஷ்ணு பிரசாத்தும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர். பாமக தலைவர் ராமதாஸ் தங்கர் பச்சானுக்கு ஓட்டு போட சொல்லுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்

மகன் அன்பு மணி மச்சானுக்கும் மருமகள் தனது அண்ணனுக்கும் ஓட்டு போட சொல்லுகின்றனர். கடலூர் தொகுதியில் உள்ள வன்னியர் பெருமக்கள் தற்போது யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று குழப்பத்தில் உள்ளனர்.  காடுவெட்டி குரு உயிரோடு இருந்தால் கூட யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருப்பார்.

அவரும் தற்போது உயிருடன் இல்லை மச்சானுக்கு ஓட்டு போடுவதா? இல்லை கட்சியை சார்ந்த தங்கர்பச்சானுக்கு ஓட்டு போடுவதா? என்று புலம்பி வருகின்றனர் பாட்டாளி சொந்தங்கள். அப்பாவுக்கும்  மகனுக்கும் நடக்கும் சண்டையில் நம்மை பகடை காயாக்கி பலிகடாவாக்கி வருகிறார்கள் என தினந்தோறும் பல பதிவுகளை சமூக வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் பாமகவினர்.

ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது சொந்த சாதியினரை இன்னும் கூட ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!