chennireporters.com

அமைச்சர் விழாவில் கட்டிங் கவரை சுருட்டி பத்திரிகையாளர்களுக்கு நாமம் போட்ட ; ஏபிஆர்ஓ நந்தகுமார்..

வேலூரில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்ட விழாவில் செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஏபிஆர்ஓ நந்தகுமார்!

வேலூர் பென்ட்லாண்ட் மருத்துவமனையில் நவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்காக ரூ.197.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்தப் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்வையிட 09-11-2023 வியாழக்கிழமையன்று வேலூருக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ஏ.பி.ஆர்.ஓ நந்தகுமார் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் , நோயாளிகள் பென்ட்லண்ட் மருத்துவமனையில் திரண்டிருந்தனர்.

                                                                               ஏ.பி.ஆர்.ஓ நந்தகுமார்

இந்நேரத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் பணியை ஆய்வு செய்தார். நிகழ்ச்சி முடிந்து திருவண்ணாமலைக்கு புறப்படும்போது  செய்தியாளர்களுக்கு தலா ரூ. 1000 ம் கவர் வழங்குமாறு அந்த ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து விட்டு சென்றார்.

                                     வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்

இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரர் கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் பேச்சை கேட்டு செய்தியாளர்களுக்கு தலா ரூ.200 மட்டும்  கொடுத்துள்ளார். இதை வாங்க மறுத்த செய்தியாளர்கள் அமைச்சர் தலா ரூ. ஆயிரம் கொடுக்குமாறு தெரிவித்து விட்டுச் சென்றார். நீங்கள் ஏன் இப்படி மாற்றி கொடுக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டு பணத்தை வாங்க மறுத்தனர்.

டுபாக்கூறுகளை உருவக்குவதே இது போன்ற கல்லா கட்டும் அதிகாரிகளால் தான் என்கின்றனர் சில பத்திரிகையாளர்கள். பத்திரிகையாளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் தருவதை அதிகாரிகள் நிறுத்தினால் டுபாக்கூர் ரிப்போட்டர்களை கலையெடுக்கலாம் இந்த கவர் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எழுத படிக்க தெரியாத தற்குறிகள் எல்லாம் ரிப்போட்டர்கள் என்று கலெக்டர் ஆபிசிற்கு வருபவர்களை துரத்தி அடித்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் ஒரு இளம் பத்திரிகையாளர்.

இப்படி செய்தியாளர்களை வேண்டுமென்றே அலைக்கழித்தால் எப்படி என்று ஏபிஆர்ஓ நந்தகுமாரிடம் கேட்க நீங்கள் அரசு செய்தியை பத்திரிக்கையில் போடவில்லை என்றாலும் பரவாயில்லை என்று விதிமுறையை மீறி அநாகரீகமாக பேசி வருகின்றார். இதையடுத்து செய்தியாளர்கள் ஏ.பி.ஆர்.ஒ. நந்தகுமாரை சந்தித்து தங்களுக்கு அமைச்சர் அளித்த அன்பளிப்பு பணம் ரூபாய் ஆயிரத்தை கேட்டு முறையிட்டனர். அப்போது ஏ.பி.ஆர்.ஓ. நந்தகுமார் ஒரு செய்தியாளரிடம் நீங்கள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்துள்ளீர்கள். உங்களுக்கு பணம் கிடையாது என்று தெரிவித்தார்.

அத்துடன் செய்தியாளரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஏ.பி.ஆர்.ஓ. அலுவலக ஊழியரிடம் கொடுத்துவிட்டார். அவர் அமைதியாக நின்றிருந்தவர் சும்மா இங்க வராதீர்கள் கிளம்புங்க என ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். அத்துடன் அந்தப் பகுதியில் சுமார் ஏழு முதல் எட்டு செய்தியாளர்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏ பி ஆர் ஓ செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி ஆட்டையை போட்டது தெரியவந்தது.

இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அந்த ஏ பி ஆர் ஓ சக செய்தியாளர்களிடம் அந்த செய்தியாளர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் வந்துவிட்டு என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என்று சொன்னதோடு, என்னிடம் கைநீட்டி பேசுகின்றனர் என்று கூறியுள்ளார். இவரு என்ன கலெக்டரா? இல்லை அமைச்சரா? என்று கேட்டனர். அதற்கு நான் யார் தெரியுமா சின்னவர் ஆளு என்று திமிராக பேசுகிறாராம்.

ஏ.பி.ஆர்.ஓ. நந்தகுமாரை சந்தித்து தனியார் அல்லது அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள சிறப்பு அழைப்புக்கு அனுமதி ஒப்புதல் வாங்க வருபவர்களிடம் பகிரங்கமாக ஏ.பி.ஆர்.ஓ. நந்தகுமார் டீசலுக்கு பணம் வேண்டும்  அது தவிற பத்திரிகையாளர்களுக்கு கவர் தரவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டு வாங்கி ஆவர் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். அவர்களும் வேறு வழியின்றி கேட்கும் பணத்தை முழுவதுமாக கொடுத்துவிட்டு வெளியில் சொல்லாமல் போய்விடுகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி அவர்களது பெயரில் தீபாவளி வசூல் வேட்டை நடத்துவது எவ்வகையில் நியாயம் என்கின்றனர் செய்தியாளர்கள். செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி சென்னை சில்க்ஸ், பச்சையப்பா’ஸ் சில்க்ஸ், ஆவின் உள்ளிட்ட பல இடங்களில் வசூல் வேட்டை நடந்ததாகவும் ஏ.பி.ஆர்.ஓ. நந்தகுமார் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை வழங்காமல்  வேலையும் பார்க்காமல் வசூல் செய்வதிலேயே முழு நேரம் பணியாற்றி வருகிறார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஏ‌.பி.ஆர்.ஓ. நந்தகுமார் மீது துறை ரீதியான விசாரணையை நடத்தி நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

                                      செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன்

இதே போன்று கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சியிலும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய அன்பளிப்பு தொகையையும் ஒட்டுமொத்தமாக அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு  பத்திரிகையாளர்களுக்கு எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி ஏப்பம் விட்டார் என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது. தமிழக அரசும், செய்தி துறை அமைச்சர் சாமிநாதனும் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் செய்தியாளர்கள்

இதையும் படிங்க.!