chennireporters.com

இளம் பெண்கள் கிராம்பு சாப்பிட்டால் முகப்பரு வராது.

தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது.

இதனுடன் கிராம்பு சேர்த்து சாப்பிடுவதால் பல ஆயுர்வேத நன்மைகள் உடலுக்குள் ஏற்படுகிறது .கிராம்பில் பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது.

இத்தனை சத்து மிக்க கிராம்பை தினமும் காலையில் எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

இரவில் தூங்குவதற்கு முன் அதாவது சாப்பிட்ட பிறகு 1 கிராம்பு சாப்பிட்டு அதனுடன் 1 டம்ளர் சூடான நீரை குடிக்க வேண்டும்.அது பல வகையான கடுமையான நோய்களை சரிசெய்கிறது.

இதன் மூலம் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.மேலும் இது பல வயிற்று பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் அமைகிறது.

வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் அஜீரணம் போன்ற பல சிக்கல்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.தொண்டை புண் மற்றும் வலியைப் போக்க கிராம்பு உங்களுக்கு உதவும்.

கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் 1-2 கிராம்புகளை உட்கொள்வதால் இந்த பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளதால் முகத்தில் முகப்பரு வராமல் தடுக்கின்றது.

இது தவிர கிராம்பை உட்கொள்வதன் மூலம் மார்பு சளியையும் வெளியே கொண்டு வருகிறது.செரிமானம், பித்தம், வாயு பிரச்சனைகள், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், காலரா, தலைவலி, விக்கல் மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

இதையும் படிங்க.!