chennireporters.com

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிக்கு தொடர்பா? தமிழக போலீஸின் ரகசிய விசாரணை.!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிமுகவினர் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தன் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார் கடந்த 1991ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்.

கொடநாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கூலிப்படை ஒன்று கொட நாடு எஸ்டேட் டுக்குள் நுழைந்து (அதாவது சசிகலா 2017 பிப்ரவரி 15ஆம் தேதி சிறைக்கு சென்ற பிறகு) கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நடத்தியது.

நன்றி the hindu

இந்த சம்பவத்தின்போது எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார் அங்கிருந்த கிருஷ்ணா பகதூர் என்ற காவலாளியின் கை கால்களை கட்டி போட்டு கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் நடத்தினர்.

இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது கொடநாட்டில் நடந்த இந்த கொலை கொள்ளை சம்பவம் அ.தி.முக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அதுவும் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது நடந்தது தான் பல்வேறு கேள்விகளை எழ வைத்து விட்டது இதன் பின்னர் நடந்த சம்பவங்கள் பரபரப்பான சினிமா கிளைமாக்ஸ் பார்ப்பதைப் போல இருந்தது.

இந்த சம்பவத்தின் முக்கிய நபராக செயல்பட்டதாக கூறப்பட்ட கனகராஜ் என்பவர் ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணி புரிந்தவர் அவர் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார் மற்றொரு நபரான சயான் என்பவர் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்துவிட்டனர் சயான் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினார் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டிவி கேமராவை கண்காணித்து வந்த நடு ஹட்டியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் இருக்கும் இடமும் தற்போது வரையில் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தெகல்கா முன்னாள் எடிட்டர் மனோஜ் சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அந்த வீடியோவில் மனோஜும் பேசி யிருந்தார்.

கொடநாடு எஸ்டேட்

அதில் கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது இதற்காக சயான், மனோஜ், சாமுவேல் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்தன.

இந்நிலையில் கொடநாடு வழக்கில் மீண்டும் மறு விசாரணையை திமுக ஆட்சி பதவி ஏற்றதும் விசாரணையை தொடங்கியுள்ளது கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசின் கோரிக்கைக்கு ஊட்டி நீதிமன்றம் அனுமதி அளித்ததால் மறு விசாரணை நடத்துவதற்காக கோத்தகிரி போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

கடந்த 17ஆம் தேதி உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணைக்கு சயான் வந்தி ருந்தார் அவரிடம் மாவட்ட எஸ்பி ஆஷிஸ்ராஹாவத் குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் விசாரணையை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது போலீசார் நடத்திய விசாரணையில் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை இது தொடர்பாக பேசிய எஸ்.பி ஆஷிஸ் அவர் கூறியதை பதிவு செய்து கொண்டோம் என்று மட்டும் கூறினார்.

அதேநேரம் கொடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுகிறது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர் இதற்கு பதிலளித்த முதலமைச்சர்
மு. க.ஸ்டாலின் கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவினரின் நடவடிக்கைகள் “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை ” என்பது போல் உள்ளன என்றார் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுத்திருக்கும் கொடநாடு வழக்கு விவகாரங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்ததில் இருந்து இந்த விவகாரத்தில் மர்மம் உள்ளதாக தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்தது.

எடப்பாடி அச்ச படுவதற்கு காரணம் என்ன அவருக்கும் இந்த கொலை வழக்குக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு தெகல்காவில் பணிபுரிந்த மேத்யூ சாமுவேல் என்பவர் மேலும் சில விவரங்களை வெளிக்கொண்டு வந்தார் அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடந்து வந்தது அந்த வகையில் மறுவிசாரணை நடப்பதால் எடப்பாடியின் பெயர் சேர்க்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு எடப்பாடி ஏன் பயப்படுகிறார் என்றால் இந்த வழக்கில் சஜீவன் என்ற மர வியாபாரியின் பெயர் வந்துவிடுமோ என்பதுதான் காரணம்.

சஜீவன் என்பவர் மீது மரக் கடத்தல் வழக்கு இருக்கிறது அவருக்கு அதிமுகவில் மாநில வர்த்தக அணியில் பதவி கொடுத்துள்ளனர் கொடநாடு வடக்கில் அவர் பெயரும் அடிபடுகிறது இதே நபர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கும் மர வேலைகளை செய்து கொடுத்துள்ளார்.

எடப்பாடியின் சகோதரர்களோடு அவருக்கு நெருக்கமாக உள்ளது எனவே இந்த வழக்கில் எடப்பாடியின் சகோதரர் பெயரும் எடப்பாடி மற்றும் உறவினர்கள் பெயரும் சேர்க்கப்படும் என்ற நிலை உள்ளது.

புலன் விசாரணையில் சஜீவன் அப்ரூவராகி உண்மைகளை சொல்லி விடுவாரோ என்ற அச்சம் எடப்பாடி தரப்பு இருக்கிறது என்று போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கொடநாட்டில் மர்மமாக மரணம் நடந்த போதும் குடும்பம் விபத்தில் இறந்த போதும்

யாராலும் நுழைய முடியாத ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்கு உள் நுழைந்து கொள்ளை அடித்துவிட்டு கொலை செய்துவிட்டு செல்கிற அளவிற்கு கொள்ளையர்களுக்கு எப்படி தைரியம் வந்தது.?

கொள்ளையர்கள் பின்னாடி இருந்து இயக்கியது யார் என்கிற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை போலவே கொடநாடு விவகாரத்தில் நடந்த உன் மர்மங்களும் மக்களிடத்தில் சொல்ல வேண்டிய நிலை திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைக்கு பிறகுதான் கொடநாட்டில் என்ன நடந்தது என்கிற உண்மை வெளியே தெரியவரும் என்கின்றனர் திமுகவினர்.

இதையும் படிங்க.!