chennireporters.com

உலக கோப்பை கிரிகெட் போட்டி 70,000ம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டதா?

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டி 500க்கும் மேற்பட்ட இணையதளங்கள் பெட்டிங்கை தொடங்கியுள்ளதாகவும் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலகக்கோப்பை வெல்லும் என பந்தயம் கட்டி உள்ளதா தற்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.முதலில் சூதாட்டத்திற்கான ஸ்கிரிப்ட் வீரர்களிடம் தனித்தனியாக வழங்கப்படும். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும் எந்த ஓவரில் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்று அந்த ஸ்கிரிப்டில் தெளிவக குறிப்பிட்டிருக்கும் . இது எழுத்து வடிவமாக பிரிண்ட் செய்யப்பட்டு கொடுக்கப்படும். இதுதான் சூதாட்டத்தின் முதல் படி என்று டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோஃபர் ஜோபன், தெரிவித்துள்ளனர்.சூதாட்டம் செய்ய ஒப்புக்கொள்ளும் வீரர்களை தனித்தனியாக சந்தித்து இந்த ஸ்கிரிப்ட் முதலில் வழங்கப்படும்.  எப்போதும் தனியாகவே வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் சில சமயங்களில் குழுவாகவும் வீரர்கள் சூதாட்டம் செய்ய ஒத்துக் கொள்வார்கள். அது போன்ற சமயங்களில் பீல்டிங் மாற்றுவதே சிக்னல் ஆகும். கேப்டன் சூதாட்டத்தில் ஈடுபடும்போது ஒரு குறிப்பிட்ட ஓவரில் இரண்டு முறை பீல்டிங் மாற்றினால் அது சிக்னல் ஆகும்.ஆனால் எல்லா ஓவரிலும் இல்லாமல் சில குறிப்பிட்ட ஓவர்களில் மட்டுமே இது கணக்கில் எடுக்கப்படும். ஒரு வீரர் களத்தில் இதுபோன்ற சிக்னல் கொடுத்துவிட்டார் என்றால் அடுத்து எல்லாம் வேகமாக நடக்கும்.  மைதானத்தில் உயர்தர ரசிகர்கள் இருக்கும் இடத்தில் இருந்து சூதாட்ட நபர் இதை கவனித்துக் கொண்டே இருப்பார். சிக்னல் கிடைத்ததும் அவர் உடனடியாக போன் செய்து தனது சூதாட்ட குழுவுடன் விவரங்களை தெரிவிப்பார். அதன்பின் இந்த சூதாட்டம் நடக்கும் ஆனால் இது எல்லாம் இரண்டு மூன்று நிமிடத்திற்குள் நடத்த வேண்டும். பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் சிக்னல்களும் இதே போல் தான் இருக்கும். பந்து போட வருபவரை 6,10,15,20 ஓவர்களில் பேட்ஸ்மேன் பாதியில் நிறுத்தினால் அது சிக்னல், அதேபோல் அந்த ஓவரில் க்கிளவுசை மாற்றுவது ஹெல்மெட்டை கழட்டுவது போன்ற செயலை செய்தாலும் அது சிக்னல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஐபிஎல் போட்டியில் கேரள வீரர் ஸ்ரீசாந்த் இது போன்ற சிக்னல் கொடுத்து தான் போலீஸிடம் சிக்கி கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பௌலர்கள் கொடுக்கும் சிக்னல்கள் பாதுகாப்புக் கருதி அடிக்கடி மாற்றப்படும் ஆனால் கைகுட்டை வைத்து முகம் துடைப்பது முக்கியமான சிக்னல் ஆகும்.சிலருக்கு சிக்னல் கொடுக்க பயம் என்றால் முதல் பந்தில் வயடு போடுவார்கள் இல்லையென்றால் முதல் பந்தை போட்டுவிட்டு நேரடியாக சென்று  விக்கெட் கீப்பரிடம் பேசுவார்கள். ஆனால் இதெல்லாம் 6, 10,15,20 ஆகிய ஓவர்களில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் மற்ற ஓவர்களில் முதல் பந்து வயிடு போட்டால் அதில் கணக்கில் வராது இதுதான் சூதாட்டத்தின் அறிகுறிகள்.

 

இந்த சூதாட்டம் தொடர்பாக எழுபதாயிரம் கோடிக்கு மேல் பந்தயம் வைத்து கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மோதிக்கொண்ட அன்று நடந்துள்ளது என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்று இந்திய கிரிக்கெட் வாரியமும் அகில இந்திய கிரிக்கெட் போடும் நான் விசாரிக்க வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.இந்தியா எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் தோல்வியே இல்லாமல் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள்  தென்ஆப்ரிக்கா உடன் ஆடிய ஆட்டத்தில் 83  ரன்களுக்கு அந்த அணியை  சுருட்டி ஆல் அவுட் ஆக்கி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போது மட்டும் எப்படி தோல்வி பெற முடிந்தது.

சிறப்பான பேட்டிங்கையும் சிறப்பான பீல்டிங்கையும் இந்திய வீரர்கள் செய்யாமல் போனதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள் எனவே சிபிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் இந்திய வீரர்களுக்கு  இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறதா என்று இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க.!