திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கே.வெங்கடேஷ் இவர் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
கே.ஆர்.வி.கல்வி அறக்கட்டளையின் தலைவரும் மற்றும் அனைத்திந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலருமான கே.வெங்கடேஷ் அவர்கள் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் மாநில செயலாளர் வினோஜ் ப செல்வம் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் கருநகராஜன், மற்றும் மாநில அலுவலக செயலாளர், ஜே.லோகநாதன் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சிறப்புடனும் வலுவாகவும் கட்டமைக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தொழிலதிபர் வெங்கடேஷ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.