#murappanadu lok adalat நெல்லை மாநகரத்தை ஒட்டிய பகுதி கிருஷ்ணாபுரம். நெல்லையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கோயில் குளத்தின் நிலத்தை அதாவது 400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.
400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.ரெங்க நாச்சியாரின் கணவர் ஜெகன் குமார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விசாரணை அதிகாரி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். நெல்லையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகரத்தை ஒட்டிய பகுதி கிருஷ்ணாபுரம் நெல்லையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ளது.
இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரெண்டு லட்சத்துக்கு விற்பனையாகிறது.தற்போது வீடுகள் சிறிய தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இதன் அருகில் நெல்லை தூத்துக்குடி நெடுஞ்சாலை உள்ளது. இதனால் தற்போது இந்த பகுதியில் நிலத்திற்கு கடுமையான தேவை அதிகமாகியுள்ளது கிருஷ்ணாபுரத்திற்கு அருகில் பாப்பா குளம், சிவலார் குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளன.நில மோசடியில் ஈடுபட்ட ரெங்க நாச்சியார்.
ஒவ்வொரு குலமும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது . இந்த ரெண்டு குளத்தையும் நெல்லை சேர்ந்த நாச்சியார் என்பவருக்கு முற்ப நாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பத்திரப்பதிவுத்துறை டிஐஜி செந்தமிழ் செல்வன் விசாரணை நடத்த பத்திரப்பதிவு துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது நெல்லையில் முற்ப நாடு சார்பதிவாளர் அலுவலக எல்லையில் தான் கிருஷ்ணாபுரம் உள்ளாது. இந்த பகுதியில் தான் பாப்பா குளம், சிவலார் குளம் உள்ளது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
ஒவ்வொரு குளமும் தலா 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியில் தற்போதைய நிலத்தின் மதிப்பு சென்ட் இரண்டு லட்ச ரூபாய் அதன்படி பார்த்தால் 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் 400 கோடியாகும். இந்த நிலத்தை நூதனமான முறையில் ஒரு கும்பல் இதை அபகரித்து திட்டமிட்டுள்ளது.
அதன் படி திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகர் முனி சிப்பல் காலனியில் வசிப்பவர் ரெங்க நாச்சியார் இவரது சகோதரர் பட்சி ராஜன் இவர்களது தந்தை வெங்கட வரதாச்சாரி என்ற ராஜன்.வெங்கட வரதாச்சாரி இறந்து விட்டதால் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக இருவரும் பதிவுத்துறைக்கான லோக் அதாலத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.பத்திர பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
அப்பா பெயரிலான சொத்துக்கள் தங்களுக்கு தான் வேண்டும் என்று இருவரும் வழக்கு பதிவு நடத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து லோக் அதால கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகி விட்டோம். அதன்படி குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்களை ரெங்க நாச்சியாருக்கு கொடுக்க சம்மதிப்பதாக பட்சி ராஜன் லோக் அதாலத்தில் மனுத்தாக்கல் செய்தார் .அந்த மனுவில் தங்களது சொத்து சர்வே எண்ணுடன் சேர்த்து பாப்பகுளம் சிவலாயர் குளத்தின் சர்வே எண்ணையும் இணைத்து கூறியுள்ளார். இந்த மனு வை ஏற்றுக்கொண்ட லோக் அதாலத் அந்த மனுவின் அப்படையில் குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்கள் அனைத்தும் ரங்க நாச்சியாருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் இரண்டு குளத்தின் சர்வே என்னும் சேர்க்கப்பட்டிருந்தன .
லோக் அதாலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஆவணங்களை வைத்து அலுவலகத்தில் குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்களை தன் பெயரில் பதிவு செய்து தரும்படி ரங்கநாச்சியார் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி விண்ணப்பம் செய்தார். அந்த ஆவணத்தை சார் பதிவாளராக இருந்த சே.குமரேசன் பதிவு செய்யாமல் நிலுவையில் (நிலுவை எண்154 216 ) வைத்துவிட்டார். ஒரு ஆவணத்தை நிலுவையில் வைத்திருந்தால் சரியான ஆவணங்கள் இல்லை என்று பொருள். ஆவணங்கள் இல்லாவிட்டால் தான் நிலுவையில் வைத்திருப்பார்கள்.முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகம்.
பின்னர் அதே மாதத்தில் 29ம் தேதி ஆவணங்களை சரிபார்த்துவிட்டு பதிவாளர் குமரேசன் ஆவணங்களை பதிவு செய்து பத்திரப்பதிவு எண் 2572 2016 அன்று கொடுத்துள்ளார். அதில் சர்வே எண் 244 பாப்பகுளம் 229 சிவாலர் குளம் என்பதையும் எந்த முன் ஆவணமும் இல்லாமல் வில்லங்க சான்று பார்க்காமல் மேலும் சர்வே எண் சரி பார்க்காமல் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
மேலும் சர்வே எண் 244 229 ஆகியவை 2017ம் ஆண்டு அதாவது பத்திரப்பதிவு செய்த ஓராண்டுக்கு பின்னரும் அரசு ஆவணத்தில் இருந்த இரு சர்வே எண்களும் அரசு புறம்போக்கு நிலம் என்றும் உள்ளது. இதனால் சார் பதிவாளர் குமரேசன் மோசடி நபர்களுக்கு உடந்தையாக இருந்து அரசு குளத்தை ரெங்கநாச்சியாரின் பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளது டிஐஜி செந்தமிழன் செல்வன் விசாரணையில் தெரியவந்துள்ளது.நெல்லையில் 400 கோடி மதிப்புள்ள குளத்தை சார்பதிவாளர் உடந்தையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அரசு சொத்தை அபகரித்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று பத்திர துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
அவர் இந்த அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த அதிமுக ஆட்சியில் 400 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது .முறப்ப நாடு சார்பதிவாளர் குமரேசன்.
மேலும் ரங்கநாச்சியாரும் அவரது சகோதரரும் குளத்தை அபகரிப்பதற்காக வேண்டும் என்றே தங்கள் குடும்பத்துக்குள் சொத்து பிரச்சனை இருப்பது போல லோக் அதாலத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதும், பின்னர் லோக் அதாலத்துக்கு வெளியே சமரசமாகி கொண்டோம் என்று ஒரு பொய்யான ஆவணத்தை தயாரித்து அதில் குளத்தின் சர்வே எண்ணையும் சேர்த்து தாக்கல் செய்திருப்பதும் பின்னர் லோக் அதாலத்தில் உத்தரவை வைத்து போலியாக பத்திர பதிவு செய்திருப்பதும் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலங்களை தனியாருக்கு லஞ்சப் பணம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்துள்ள அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்து அவருடைய குடும்ப சொத்துக்களையும் அவரது உறவினர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் வைக்க வேண்டும்.அது தவிர அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரே மாதத்தில் வழக்கு விசாரணை முடித்து அவர்களுக்கு அரசு தண்டனை வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பத்திர பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி. ஐஏஎஸ்.
நேர்மையாக பணியாற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இப்படி தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் செய்யும் பிராடு தனத்திற்கு உடந்தையாக செயல் பட்டு அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்கு ஆசைப்படும் பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகள், சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் பிச்சை எடுப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.