chennireporters.com

கேரளாவை உலுக்கிய இளம் பெண் கொலை.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி விஸ்வமயா கொலை செய்யப்பட்டது தான் கேரளா காவல் துறையில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

திருவனந்தபுரம் மனைவி விஸ்வமயாவுடன் சண்டை போட்டது உண்மைதான் ஆனால் அந்த வாட்ஸ்அப் ஃபோட்டோக்கள் எதுவும் உண்மை இல்லை என்று இளம்பெண் மர்ம மரணம் தொடர்பாக அவரது கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் விஸ்வமயா கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.

விஸ்வ மயாவுக்கு அவரது குடும்பத்தினர் திடீரென கிரண்குமார் என்ற மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

வரதட்சணையாக 100 பவுன் நகை, டொயோட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்வரிசைகளை பெண்ணுக்கு சீதனமாய் தந்துள்ளனர்.

ஆனால் நாளுக்கு நாள் வரதட்சணைக்கொடுமைகணவர்வீட்டில்வெடித்துள்ளதுகணவரின்  கொடுமையான தாக்குதலுக்கு இளம்பெண் விஸ்வமயா ஆளானார்.

மயாவின் உடம்பெல்லாம் கட்டையால் அடித்து தாக்கியுள்ளார்.ஆணியால் குத்தி சித்திரவதை செய்துள்ளார் இந்த விஷயமெல்லாம் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

இறுதியில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்து விட்டார்.

விஸ்மயா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது அதில் விஸ்மயா தூக்கில் தொங்கி இறந்துள்ளது தெரியவந்தது.

தன் மகளை கிரண்குமார் அடித்துக் கொன்று விட்டதாக போலீஸிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

மரணத்திற்கு முன்னதாக தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாக அதனால் ஏற்பட்ட காயத்தையும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த போட்டோக்களின் அடிப்படையில் விசாரணை மேற் கொள்ளப்பட்டது நேற்று இரவு கிரண்குமார் போலீசில் சரணடைந்தார்.

கிரண்குமார் தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும் அதனாலேயே மனைவியிடம் தகராறு செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

வாக்கு மூலத்தில் கிரண்குமார் மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்களுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை நடந்தது உண்மைதான் ஆனால் இரவெல்லாம் அழுது கொண்டு இருந்தாள்.

தற்போது அவரை அடித்ததுபோல் காயங்களுடன் வரும் போட்டோக்கள் எதுவும் உண்மை இல்லை எல்லாம் போலியானவை உறவினர்கள் சொல்வது பச்சைப் பொய் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் கிரணை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கிரண் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் விஸ்வமயா எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த இறப்பு எப்படி நடந்திருக்கும் என்பது தான் கேரளா போலீசாரிடை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!