chennireporters.com

சென்னை தலைமை செயலகத்தில் கருணைக்கொலை செய்யுமாறு மூதாட்டி கதறல்..

நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், சென்னை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் அப்படியெல்லாம் இங்கு மனு அளிக்க முடியாது என்று காவல்துறையினர் அந்த மூதாட்டியை விரட்டியுள்ளனர்.

இதனால் நம்பிக்கையுடன் முதல்வர் தனிப்பிரிவை அணுகிய அந்த மூதாட்டியை போலீசார் வெளியே விரட்டியுள்ளனர்.

மேலும் விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது நின்ற பாட்டி அருகில் இருந்த ஜெராக்ஸ் கடையில் என்னை கருனை கொலை செய்துவிடுங்கள்.

என்ற வாசகத்தை தயார் செய்துகொண்டு கடற்கரை சாலையில் நின்று கொண்டு “என்னை கருணை கொலை செய்து விடுங்கள்” என்று கையில் பதாகை ஏந்தி கதறி அழுதுள்ளார்.

அவர் கையில் வைத்திருந்த மனுவில், என் இடத்தை போலி பத்திரம் செய்து பட்டா மாறுதல் செய்து அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

இதனால் நான் அநாதையாக நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

என்றும், தன் இடத்தை திரும்பப் பெற்று தர முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி கொண்டு வந்திருந்தார்.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் நேர்மையை வலியுறுத்தி வரும் ஸ்டாலின், மூதாட்டி வலியுணர்ந்து கண்ணீரை துடைப்பாரா? மனு கொடுக்க வருபவர்களை விரட்டியடிப்பார்களா?

நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பார்கள் அதுபோல அதிகாரிகளும் காவல்துறையினரும்

இன்னும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடப்பதாக நினைத்துக்கொண்டேன் அலட்சியமாக பணியாற்றி வருகிறார்கள் என்பதே பாட்டியை விரட்டியதிலிருந்தே தெரிகிறது.

இதையும் படிங்க.!