chennireporters.com

ஆவடி தாலுக்கா ஆபிசில் ஆறு ஆண்டுகளாக வழங்கிய பட்டாக்களை விசாரணை கமிஷன் வைத்து விசாரிக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூந்தமல்லி தாலுக்கா அலுவலகத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட தொடங்கியது.

ஆவடி, திருமுல்லைவாயில், கோவர்தனகிரி, கோவில்பதாகை, மிட்டனமல்லி, பட்டாபிராம், கவர பாளையம், வீராபுரம், கொள்ளுமேடு, வெள்ளானூர் என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி தாலுக்கா உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை நத்தம் புறம்போக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியிலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் பல பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அது தவிர போலியான ஆவணங்கள் மூலம் திருமுல்லைவாயல், மோரை, கோவில்பதாகை, மிட்டனமல்லி, கோவர்தனகிரி, பட்டாபிராம், திருநின்றவூர், பாலவேடு, தண்டுறை போன்ற பகுதிகளில் ஏரி, குளம், களம், பாட்டை, மேய்ச்சக்கால் ஆகிய புறம்போக்கு இடங்களுக்கு சில தாசில்தார்கள் பணம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி உள்ளனர்.

தாசில்தார் மதன் குப்புராஜ்.

ஆனால் அந்த பட்டாக்கள் அனைத்தும் அரசு ஆவணங்களில் வரவு வைக்கப்பட வில்லை முதல் தாசில்தாராக இருந்த ஸ்ரீதர், பாஸ்கரன்,”ஊழலுக்கு பேர் போன தாசில்தார் மதன் குப்புராஜ்,” இவர் மீது போலீயான வாரிசுதாரர் சான்றிதழ் வழங்கியதாக நொளம்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரவணன், பசையுள்ள பார்ட்டியாக இருந்தால் காந்தம் போல ஒட்டிக்கொள்ளும் சங்கிலிரதி தன் பெயரிலேயே செல்வத்தை வைத்துக்கொண்டிருந்த தாசில்தார்.

தாசில்தார் சங்கிலி ரதி

இப்படி பல அதிகாரிகள் செட்டில்மென்ட் தாசில்தார் மற்றும் துனை (D.T)தாசில்தார்கள் குமார், செந்தில், கலெக்ஷனுக்கு பேர் போன நடராஜ் மற்றும் சர்வேயர்கள் துனையுடன் தலைமை சர்வேயர் அறிவழகன், இவர் பங்காக வெயிட்டாகத்தான் வாங்குவாராம்.

சுமன் குறைந்த பட்சம் ஐநூறு ரூபாயாவது வாங்காமல் விட மாட்டாராம் விஜயலட்சுமி நூறு ரூபாயாவது கொடுத்துட்டு போங்க என்று கெஞ்சுவாராம்.இளிச்சவாயர்கள் என்றால் மிரட்டியே பணத்தை பிடுங்குவாராம்.

சுமன் சர்வேயர்.

இந்த குழு பல கோடி ரூபாயை போலி பட்டாக்கள் மூலம் இந்தக் குழு சம்பாதித்து இருக்கிறது.எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களை மேற்படி அதிகாரிகள் தங்களுக்கு தேவையான புரோக்கர்கள் பலரை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பட்டாவிற்கு 20,000 முதல் 10 லட்சம் வரை வாங்கிக்கொண்டு பட்டா வழங்கியுள்ளனர்.

குறிப்பாக துணை தாசில்தாராக பணியாற்றிய நடராஜன் காலத்தில் போலியாக செட்டில்மெண்ட் தாசில்தாரின் கையொப்பங்களையும் சீல்களையும் தயாரித்து பல பட்டாக்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

D.T. நடராஜ்.

அது தவிர டவுன் சர்வேயில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க அதிகாரம் இல்லாத நடராஜன் நகல் வழங்கும் அதிகாரத்தின் படி பலருக்கு பணம் பெற்றுக் கொண்டு நகல்  வழங்கியிருக்கிறார்.

அது தவிர செட்டில்மென்ட் தாசில்தார் போலவே பல களம் புறம்போக்கு மற்றும் ஏரி புறம்போக்கு மேய்க்கால் புறம்போக்கு ஆகிய இடங்களுக்கு அரசு ஆவணங்களில் திருத்தம் செய்து நத்தம் புறம்போக்கு என மாற்றி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த ஆறு ஆண்டுகளாக ஆவடி தாலுக்கா பிரிக்கப்பட்ட திலிருந்து வழங்கப்பட்ட மேனுவல் பட்டா ஆன்லைன் பட்டா என அனைத்து பட்டாக்களையும் ஆய்வு செய்து.

உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் அறப்போர் இயக்கமும் தமிழக அரசின் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வருவாய்த்துறை செயலாளருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கும் புகார் அளித்துள்ளனர்.

விஜயலட்சுமி சர்வேயர்.

எழுதப் படிக்கத் தெரியாத சிலர் போலி பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் வலம் வரும் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் சிலர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களை பயன்படுத்தியே அதிகாரிகள் அதிக அளவில் ஊழல் செய்துள்ளனர்.இந்த முறை கேடு தொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!