chennireporters.com

மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை.

திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை, காங் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

கடந்த வாரத்தில் நடந்த சாலை போக்குவரத்தில் சிக்கிய IAS மனைவி மற்றும் IPS மகனை அடித்து துன்புறுத்தியது காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள்தான் என பொதுமக்களும்,அரசு அதிகாரிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் நிலையத்தில் இரவிலிருந்து மறுநாள் காலை 10 மணி வரை அடைத்து வைத்து வற்புறுத்தினார்கள் என்பது பெரும் அச்சத்தை தருகிறது.

சட்டத்திற்கு புறமான இச்செயலை காவலர்கள் யார் கட்டளைப்படி செய்தார்கள் என்பது அதிர்வை தருகிறது. இந்த உத்தரவை வழங்கியது யார் என்ற கேள்வி? அனைத்து அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும், மற்றும் சமூக ஆர்வலர்களிடமும் கேள்வியாக எழுந்துள்ளது. அந்த இடத்தில் கே. எஸ். அழகிரி மகள் வழி பேரன், காங்கிரஸ் குண்டர்கள்
R.கண்ணன் IAS மனைவி பயணித்த காரில் அவரது மகன் மற்றும் மகேஸ்குமார்
IPS அதிகாரியின் மனைவியும் மகனும் என ஒரே காரில் பயணித்துள்ளனர் அப்போது
R. கண்ணன் மனைவியின் கார் முன்னாடி சென்றுள்ளது பின்னாடி கே. எஸ். அழகிரியின் மகள் ம றும் பேரன் கார் சென்றுள்ளது.

அவர்கள் ஓவர் டேக் எடுப்பதற்காக முந்தி செல்ல முயன்றபோது முன்னாடி கார்கள் சென்றதால் வழி கொடுக்க முடியாததால் அலாரம் அடித்துக் கொண்டே காரை இடையில் போய் நிறுத்தி அரசியல் அதிகாரத்துடன் கே. எஸ். அழகிரியில் மகளும் பேரனும் தகாத வார்த்தையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரை பேசுவதை வீடியோவில் தமிழகம் முழுவதுமுள்ள அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்த நிலைமையா என்பதோடு, பொது இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும் அதனை பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். IAS அதிகாரி மனைவியை கே.எஸ் அழகரின் மகளும் பேரனும் தலைமுடியை பிடித்துக் கொள்ள அதன்பின் பேரன் IAS மனைவியை அடித்துள்ளார்.

இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களோடு மீட்டிங்-ல் இருந்த IAS அதிகாரி கண்ணனுக்கு அவரது மனைவியிடம் இருந்து போன் வந்ததும் உடனடியாக அவர்கள் அசோக் நகர் சென்றுள்ளார். அங்கு கண்ணன் குடும்பத்தை அசிங்க அசிங்கமாக தகாத வார்த்தைகளாக KS அழகியின் குடும்பத்தார் பேசி கொண்டும், அவர்களுடன் காங்கிரஸை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உன்னை வீடு வந்து வெட்டுவேன் நீ கலெக்டராக இருந்தால் என்ன என்று அசிங்க அசிங்கமாக பேசியுள்ளனர்.

உடனடியாக காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு உடனே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி காவல் நிலையத்திற்கு வந்து காங்கிரஸ் தொண்டர்களுடனும்நிர்வாகிகளுடன் இவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு கட்டாயப்படுத்தி வெகுநேரமாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் உடனே கண்ணன் IAS மீதும் அவன் மனைவி மீதும் டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .கே. எஸ் .அழகிரியில் குடும்பத்தினர் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை தமிழக IAS சங்கத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக சனிக்கிழமை அன்று கே.எஸ். அழகிரியின் குடும்பத்தின் மீதுள்ள வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகேஷ் குமார் ஐபிஎஸ்

இதில் பாதிக்கப்பட்டது யார் என்றால் IAS அதிகாரி குடும்பமும் மற்றும் ஒரு IPS அதிகாரியின் குடும்பமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் ஆர். கண்ணன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் இதனை நான் திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் சமூக ஆர்வலர்களும் அனைத்து சங்கங்களும் கே. எஸ். அழகிரி, மாநில தலைவர் காங்கிரஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டியும் கண்டனத்தை பதிவு செய்கின்றனர்.

 

உங்களுடைய அராஜகப் போக்கை இனிவரும் காலங்களில் எந்த இடத்திலும் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு அவர்களால் தான் பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு தமிழக முதல்வர் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்றால் காரணம் அதற்கு திராவிட மாடல் கட்சியின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தான் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் துணை இல்லை என்றால் தமிழகத்தில் இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் , ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக கூட வர முடியாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை.

திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் அவர்கள் தலையிட்டு கே.எஸ் அழகிரியை வன்மையாக கண்டிக்க வேண்டும் இது போன்ற செயல்களில் உங்களது கட்சிக்காரர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விட வேண்டும். தமிழக முதல்வராகிய தாங்கள் இப்பிரச்சினையை இத்துடன் முடித்து வைக்க வேண்டும் இருவரிடமும் பேசி பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தி, இது போல் நடைபெறாத வண்ணம் முதலமைச்சர்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு IAS,IPS மீது இந்த மாதிரியான அரசியல் அதிகாரப் போக்கு நடைபெறுவது. IAS,அதிகாரி மத்தியிலும் ,IPS மத்தியிலும் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும். ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (ரெகுலர்) ஆகியோருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு காவலர் கை துப்பாக்கியுடன் பணியாற்றிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த துறை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் வழங்கவில்லை தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், செயலாளர், கூடுதல் செயலாளர், இணைச்செயலாளர், இயக்குனர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (ரெகுலர்) பணியில் இருப்போர்களுக்கும் பொது இடங்களில் அவர்களின் பணியின்போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அனைத்து துறைகளுக்கும் இரண்டு பேர் கொண்ட காவலர்களை கண் துப்பாக்கியுடன் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனே நியமனம் செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் வாகனங்களில் செல்லும்போது யாருக்கும், இவர்கள் ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரிவது கிடையாது நிறைய இடங்களில், மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றன. இதனை எந்த ஐஏஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர்களும், அதிகாரிகளும் வெளியில் சொல்லுவதற்கு தயங்குகின்றனர். ஆகையால் தமிழக முழுவதும் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கைதுப்பாக்கியுடன், இரண்டு காவலர்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பணி பாதுகாப்பு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அதிகாரிகள் ஆய்வுகள், அலுவலகம், விசாரணை என பல்வேறு பணிகளுக்கு செ ல்லும்போது உடன் காவலர் கை துப்பாக்கியுடன் இருக்க வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும், குடும்பங்களுக்கு கூட நேரம் செலவழிக்காமல் 24 மணிநேரமும் தமிழக அரசுக்கும், பொதுமக்களுக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பணி வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும் . நேற்று நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்கது.

நேர்மையான மாவட்ட ஆட்சியராக இருந்த R. கண்ணன் ஐஏஎஸ் அவர்கள் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று பார்க்காமல் அவர் மது அருந்தி உள்ளாரா என்று அவரை பரிசோதனை செய்துள்ளனர்.ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தமிழக முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான தங்களின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய வேண்டும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய தேர்வில் தேர்வு பெற்று IAS,IPS என்ற உயர்ந்த தகுதியுடன் இந்தியாவில் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகள் ஆவார் இவர்கள்தான் இந்தியாவில் உள்ள அனைத்து கேபினெட்டுகளிலும் செயலாளர்களாகவும், தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் செயலாளராக உள்ளனர்.

இதுபோல் காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ் அழகிரியின் பேரன் மது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற கேள்வி ஐஏஎஸ் அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கேள்வியாக எழுந்துள்ளது? இதற்கு தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் காவல்துறை டிஜிபி அவர்கள் ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையை கட்டாயப்படுத்தியது யார் என்பதை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டும்? அப்படி வழக்கு பதிவு செய்தால் இரண்டு பேர் மீது தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்வது அரசியல் அதிகாரத்தை காண்பிக்கிறது.

இதற்கு ஒருபோதும் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு மக்கள் முதல்வர். மு. க. ஸ்டாலின் துணை போக மாட்டார் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே தமிழக அரசுக்கு கெட்ட பெயர்களை ஏற்படுத்த வேண்டும் என்று காவல்துறையை சேர்ந்த சிலரும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியும் அவருடைய கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் குண்டர்கள் போல் செயல்பட்டுள்ளனர்.
இது மிகவும் கண்டித்தக்கது.

தற்போது இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையாக உள்ள அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது .
இது போன்ற சம்பவம் தமிழகத்தில் முதன்முறையாக அரங்கேறியுள்ளது என்பது மிகவும் வருந்தத்தக்கது இதுபோன்ற சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படா வண்ணம் தடுக்க மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் (ரெகுலர்) போன்றவர்களுக்கு பணி பாதுகாப்பாக இருக்கும்.இது போன்ற சம்பவங்களை இனி திராவிட மாடல் ஆட்சி காலத்தில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் அதிகாரிகள் வெளியில் சுதந்திரமாக செயல்பட முடியும் வெளியில் வருவதற்கு தயங்காமல் பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பணி பாதுகாப்பு அரணாக காவல்துறை விளங்க வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும்,சமூக ஆர்வலர்கள் சார்பாகவும், ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பாகவும், பொது நலத்துடன் , தன் சார்பாகவும் வேண்டுகோள் விடுகிறார். சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர்.
முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி.

இதையும் படிங்க.!