chennireporters.com

திருவாரூர் சப்-கலெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.பல லட்ச ரூபாய் பணம் நகைகள் ஆவணங்கள் சிக்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் பவானி.அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பவானியின் வீடு

மன்னார்குடி மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பவானியின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.இவர் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது மன்னார்குடியில் வசித்து வருகிறார்.இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீரங்கம் மற்றும் மன்னார்குடியில் உள்ள வீடுகள் லால்குடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஸ்ரீரங்கம் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பவானி வீடு.

வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், மணச்சநல்லூர் சாலையில் உள்ள எஸ்.வி.ஆர் பள்ளி, அரியலூர் மாவட்டம் டால்மியாபுரத்தில் உள்ள அலுமினியத் தொழிற்சாலை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கான பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் துறை ரீதியாக புகார் உள்ளவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தாசில்தாரர்கள், ஆர்.டி.ஒக்கள், வட்டார போக்குவரத்து துறை.

அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும் அறப்போர் இயக்கத்தினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!