chennireporters.com

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயர் சொல்லி கோட்டையில் ஆட்டம் போடும் போலி ஐ.ஏ.எஸ். நித்தியானந்தம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் படிக்காமல் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் போலியாக அடையாள அட்டை, விசிட்டிங் கார்டு வைத்துக் கொண்டு பல மோசடி செயல்களில் ஈடுபட்டு பல பேரிடம் கோடி கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் சென்னை தலைமைச் செயலகத்தில் உலா வருவதாகவும், பல ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதிகாரிகளை மிரட்டி மோசடி வைலைகளில் ஈடுபட்டு பல கோடி பணத்தை ஏமாற்றி வருவதாக தற்போது  தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகாரிகள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எல்.என். நித்தியானந்தம் என்பவர் இந்திய வாணிபக் கழக உறுப்பினர் செயலாளர் (Food Corporation of India, Member Secretary) என்றும், டெல்லியில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறேன் என கூறிக்கொண்டு, சென்னை தலைமைச் செயலகத்தின், முதல் தளத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உணவு அருந்தும் ஹாலில் தான் தினந்தோறும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்துகிறார், குறிப்பாக தமிழக அரசின் ரகசிய தகவல்களை கவர்னர் மாளிகைக்கும் மத்திய அரசுக்கும் தெரிவிக்கும் உளவாளியாக வலம் வருகிறார். போலி ஐஏஎஸ் நித்தியானந்தம்.

குறிப்பாக தமிழக அரசின் ரகசிய தகவல்களை தெரிவிப்பதற்காக அடிக்கடி டெல்லி செல்வாராம். சென்னை விமான நிலையத்தில் நித்தியானந்தத்தை வரவேற்பதற்காக ஏர்போர்ட் State Protocol officers அவரை வரவேற்று, விஐபி செல்லும் கேட்டில் தான் இவரை அனுப்பி வைப்பார்களாம். அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்த ஆளாக வலம் வருகிறார்.தான் மத்திய அரசில் பணிபுரிவதால், மத்திய அரசின் பல்வேறு பணிகளை செய்து தருகிறேன் என்று கூறி கொண்டும், தில்லியில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பல பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பண மோசடியிலும் ஈடுபட்டு வருகிறார்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.என்.நித்தியானந்தம் என்பவர் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் ஏஜெண்டாக பணிபுரிந்தவர், இப்போதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இப்போதும் பாஜக வில் உள்ள பல முக்கிய தலைவர்கள் பெயர் சொல்லி பல பஞ்சாயத்து செய்தும் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

எல்.என்.நித்தியானந்தம் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் எதிரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் என்.ஆர் சிவபதி அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில், தான் ஒரு பேச்சுலர் என்று கூறிக்கொண்டு வாடகைக்கு கடந்த மூன்று மாதங்களாக வசித்து வருகிறார்.

ஆனால், இப்போது யாருக்கும் தெரியாமல் முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரி, கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில், சுகாதாரத் துறை செயலாளராக பணிபுரிந்த வி.கே‌‌.சுப்புராஜ், ஐஏஎஸ் அவர்களுடைய மகளான டாக்டர் கிருத்திகா அவர்கள், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பெசன்ட் நகரில் உள்ள அவருடைய சொந்த வீட்டில் தனது 12 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.ஆனால்  கிருத்திகா இப்போது பெசன்ட் நகர் வீட்டில் வசிப்பதையும் விட்டுவிட்டு, தன் சொந்த மகனையும் விட்டுவிட்டு, இப்போது ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் நித்தியானந்தத்துடன் கள்ளத்தனமாக குடித்தனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திரு.எல்.என்.நித்தியானந்தம் என்பவர் இந்திய வாணிபக் கழக உறுப்பினர் செயலாளர் (Food Corporation of India, Member Secretary) என்று கூறிக்கொண்டும், போலி ஐடி கார்டு மற்றும் விசிட்டிங் கார்டு வைத்துக்கொண்டு, அது மட்டுமில்லாமல், தான் பயன்படுத்துகின்ற இன்னோவா காரில் Government of India, போர்டை போட்டுக்கொண்டு, Toyota Innova  Crysta  (TN 14 Q 4446) சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களை சுற்றிவர இந்த இன்னோவா காரையும், அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதேபோன்று Government of India, போர்டை போட்டுக்கொண்டு, Toyota Innova (TN 55 M 1104) காரில் புதுக்கோட்டையிலும் வலம் வந்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டையில் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஒருவரிடம் நித்தியானந்தம் அவருடைய உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.50 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அவரையும் ஏமாற்றி விட்டார். புதுக்கோட்டை காவல்துறை டிசிபி (DCB) வழக்கு பதிவு செய்யப்பட்டு, இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோல் பல பேரிடம்   வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல மதுரையை சேர்ந்த அறிவு செல்வம் என்பவரிடம் டென்டர் வாங்கி தருவதாக கூறி ரூ.4.50 கோடி பெற்று கொண்டு, டென்டரும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. அவரை போலீசார் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும்.நித்தியானந்தம் திங்கள் முதல் வெள்ளி வரை சென்னை தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் உணவு அருந்தும் ஹாலில் தான் சில ஐஏஎஸ் அதிகாரிகளுடன் (வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் நந்தகோபால் ஐஏஎஸ்) தினமும் மதிய உணவு அருந்துகிறார், அப்போது மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தனக்கான ஒரு ஆட்களை வைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் அரசு ரகசியங்களை குறிப்பாக முதல்வர் அலுவலக ரகசியங்களையும் பெற்று கவர்னர் மாளிகைக்கும் மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.முதலமைச்சர் அவர்களின் மூத்த செயலாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்திக் கொண்டும், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நல்ல துறையில் பணி மாறுதல் வாங்கி தருவதாக கூறிக்கொண்டு, அவர்களிடமும் பல கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு, பல அரசு அலுவலர்களை அவர் சொல்வதைக் கேட்க விட்டால் அவர்களை மாற்றி விடுவேன், இல்லை என்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்றும் முதல்வர் அலுவலகமே என் கையில் இருக்கிறது என்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கூறி வருகிறார். செய்தியில் தொடர்புடைய  சுப்புராஜ் மற்றும் கிருத்திகா, நித்தியானந்தம் ஆகியோரின் தரப்பு விளக்கம் அறிய முயன்றோம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தோம் அவர்கள் விளக்கத்தை தெரிவிக்கவில்லை அவர்கள் விளக்கத்தை சொன்னால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருகிறார் இந்த டுபாக்கூர் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை என்கின்றனர் தலைமைச்செயலக அதிகாரிகள்.

அது தவிர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எங்க ஊர்காரர் நான் எது சொன்னாலும் செய்வார் என்றும் அவர் பெயர் சொல்லி பல பிராடு வேலைகளை செய்து பெரும் தொகையை கல்லா கட்டியுள்ளார் என்கிறார்கள் அதிகாரிகள். தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்  ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோருடன் நட்பு வைத்துக் கொண்டு பல மோசடி வேலைகளை செய்து வருகிறார் என்றும் சொல்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

மேலும் டெல்லியில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடத்தில் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டு பெரிய மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினால் மிகப்பெரிய அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் வெளியாகும் என்கின்றனர் டெல்லியில் உள்ள அதிகாரிகள்.

இதையும் படிங்க.!